முகேஷ் அம்பானி-யின் ஷாப்பிங் லிஸ்ட்.. 3 வருடத்தில் 3 பில்லியன் டாலர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமானிய மக்களுக்கு ஷாப்பிங் லிஸ்ட் என்றால் வீட்டுக்குத் தேவையான பொருட்களோ அல்லது எலக்ட்ரானிக் பொருட்களாகவோ இருக்கும் இன்னும் சொல்லப்போனால் பைக் அல்லது கார் ஆக இருக்கலாம். ஆனால் முகேஷ் அம்பானிக்கு லிஸ்ட்-ஏ வேற.

 

ஆம், இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களின் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-இன் தலைவர் முகேஷ் அம்பானி கடந்த 3 வருடத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகத்திற்காக 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களை வாங்கிக் குவித்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் இன்னும் லிஸ்ட்-இல் ஏகப்பட்ட நிறுவனங்களைக் குறித்துவைத்துள்ளதாகவும் தெரிகிறது.

எதற்காக இந்தத் திடீர் முதலீடுகள்..?

2019ஆம் ஆண்டு

2019ஆம் ஆண்டு

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2019ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 7 நிறுவனங்களை வாங்கிக் குவித்துள்ளது.

பேஷன் ஈகாமர்ஸ் நிறுவனமான FYND, AI சேட்பாட் நிறுவனமான Haptik, இதைத் தொடர்ந்து Reveries, EasyGov மற்றும் Sankhya Sutra Lab ஆகிய நிறுவனங்களை வாங்கியுள்ளது ரிலையன்ஸ் சாம்ராஜியம்

 

NowFloats

NowFloats

SaaS தளத்தில் இயங்கி வரும் NowFloats ஹைதராபாத் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் Reliance Strategic Business Ventures Limited நிறுவனம் 85 சதவீத பங்குகளில் முதலீடு செய்துள்ளது.

அதுமட்டும் அல்லாமல் வருகிற டிசம்பர் 2020ஆம் ஆண்டுக்குள் இந்நிறுவனத்தில் புதிதாக 75 கோடி ரூபாய் நிதியை வர்த்தக விரிவாக்கத்திற்காக முதலீடு செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ள ரிலையன்ஸ். இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த பங்கு அளவு 89.66 சதவீதமாக உயரும்.

 

Funtoot
 

Funtoot

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் e-learning பிரிவில் பல்வேறு சேவைகளை அளிக்கும் Funtoot நிறுவனத்தைச் சுமார் 71.64 கோடி ரூபாய் முதலீடு செய்து சுமார் 90.5 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது. இதுகிட்டதட்ட 10 மில்லியன் டாலர் மதிப்புடையது.

Asteria ஏரோஸ்பேஸ்

Asteria ஏரோஸ்பேஸ்

டிரோன்களைச் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கும் ரோமோட்டிக்ஸ் நிறுவனமான் Asteria ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் 51.78 சதவீத பங்குகளை Reliance Strategic Business Ventures Limited நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்த நிறுவனம் தான் இந்தியாவில் முதன் முதலாக டிரோன் தயாரிப்புக்காக உரிமம் பெற்றது குறிப்பிடதக்கது. இப்படிக் கடந்த 3 வருடத்தில் 3 பில்லியன் டாலர் முதலீட்டில் பல நிறுவனங்களை வாங்கிக் குவித்துள்ளார் முகேஷ் அம்பானி.

 

காரணம்

காரணம்

பொதுவாக ரிலையன்ஸ் ஒரு டெக்னாலஜி நிறுவனம் கிடையாது, ஆனால் ஜியோ மற்றும் ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டபோது முகேஷ் அம்பானி டெக்னாலஜியை நம்பிதான் பல வேலைகளைச் செய்து முடிக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.

இதனாலேயே குறைந்த காலகட்டத்தில் வேகமாக வளர்ச்சி அடைய தன் தேவையைப் பூர்த்திச் செய்யும் நிறுவனங்களை வாங்கிக் குவிக்கத் துவங்கினார்.

 

முதலீடுகள்

முதலீடுகள்

ரிலையன்ஸ் கடந்த 3 வருடத்தில் 566 மில்லியன் டாலரை மீடியா மற்றும் கல்வி துறையிலும், 194 மில்லியன் டாலரை ரீடைல் துறையிலும், 1.2 பில்லியன் டாலரை டெலிகாம் மற்றும் இண்டர்நெட் நிறுவனங்களிலும், 100 மில்லியன் டாலரை டிஜிட்டல் சேவையிலும், 391 மில்லியன் டாலரை கெமிக்கல் மற்றும் எனர்ஜி துறையிலும் முதலீடு செய்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani Led RIL made $3 billion worth acquisitions in 3 years

RIL made $3 billion acquisitions in three years to boost offerings, Investments include those in media, education, retail, telecom, digital, chemicals and energy sectors. Reliance Industries Ltd (RIL) has made acquisitions worth $3 billion in the past three years to boost product offerings of its subsidiaries—Reliance Jio Infocomm Ltd and Reliance Retail Ltd, among others.
Story first published: Friday, January 3, 2020, 10:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X