இந்தியாவின் 2 பணக்காரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஏற்ற இறக்கமாக மாறியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று குறைந்துள்ளது. அதற்கு நேர்மாறாக கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உலக பில்லியனர்கள் பட்டியலில் அவர்களுடைய தரவரிசையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
முகேஷ் அம்பானியின் இழப்பு: ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எதிர்பார்த்ததை விட குறைந்த அளவிலான வருவாய் ஈட்டியதை அடுத்து, இந்தியாவின் பணக்கார தொழிலதிபரான முகேஷ் அம்பானி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

தங்களுடைய வருவாய் அறிக்கை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-இன் பங்குகள் 2 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு 2 பில்லியன் வீழ்ச்சிக்கு பங்களித்தது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 16,811 கோடி. இதன் விளைவாக ப்ரூம்பர் பில்லியனர்கள் லிஸ்டில் அம்பானி ஒரு இடம் சரிந்து 15 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
Q2 காலாண்டுக்கான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-இன் நிதிநிலை அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் ரிலையன்ஸ்-இன் நிதி செயல்பாடுகள் சந்தை எதிர்பார்ப்புகளை விட குறைவாக இருந்தது. லாபத்தில் 4.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததால் இந்திய மதிப்புக்கு ரூ.16,563 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.17,394 கோடி லாபம் ஈட்டி இருந்தது. கடந்த 5 வர்த்தக நாட்களில் நிறுவனத்தின் பங்குகளும் 3.34 சதவீதம் சரிந்து அம்பானியின் செல்வத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
கவுதம் அதானியின் நிகர மதிப்பு: முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு குறைந்தாலும், கவுதம் அதானிக்கு லாபகரமான நாளாக இருந்தது. கவுதம் அதானியின் நிகர மதிப்பு ரூ.266 கோடி அதிகரித்து, அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.99.2 பில்லியனாக (சுமார் $11.9 பில்லியன்) உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து கவுதம் அதானிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்த இடைவெளியை நிரப்பும் வகையில் தற்போது மீண்டும் அவருடைய சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. அதானி இப்போது உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 18-வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுகிறது.
உலகின் முன்னாள் பணக்காரரான பெர்னார்ட் அர்னால்ட், ஒரே நாளில் 3.46 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். அவரது நிகர மதிப்பு இப்போது 182 பில்லியன் டாலர்களாக உள்ளது. இவர் பில்லியனர் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.
எலான் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஆகியோர் தொடர்ந்து தங்களின் நிலைகளை வலுப்படுத்திக் கொண்டனர். எலான் மஸ்க் 241 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருக்கிறார், பெசோஸ் 211 பில்லியன் டாலர்களுடன் தொடர்ந்து இருக்கிறார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications