இந்தியாவின் பணக்காரர்களில் முகேஷ் அம்பானியும் ஒருவர். இவருடைய சொத்து மதிப்பு கடந்த 5 மாதங்களாக கடுமையாக சரிந்து வருகிறது. தற்போது முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு $24 பில்லியனாக குறைந்திருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலைகள் தொடர்ந்து சரிந்து கொண்டே வருவதே அம்பானியின் சொத்து மதிப்பு வீழ்ந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் பங்குகள் பங்குச்சந்தையில் ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது.
இந்தியாவின் 2 பணக்காரர்களாக வலம் வருபவர்கள் தான் முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி. இருவரின் சொத்து மதிப்பும் சமீப மாதங்களில் $100 பில்லியனுக்கும் கீழே சரிந்துள்ளது. இது அவர்களின் நிதி நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தலைவரான முகேஷ் அம்பானி மற்றும் அதானி குழுமத்தின் நிறுவனரான கவுதம் அதானி ஆகியோர் தங்கள் முக்கிய வணிகங்களை மேற்பார்வையிட்டு வருகின்றனர். ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் தொழில் சார்ந்த சில அழுத்தங்களின் காரணமாக இவர்கள் இருவருக்குமான சொத்து மதிப்பில் சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு கடும் சரிவில் உள்ளது. ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் தரவுகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு $24 பில்லியன் குறைந்திருக்கிறது. இது இந்திய மதிப்புக்கு தோராயமாக ரூ.2 லட்சம் கோடியாகும். முகேஷ் அம்பானியுடன் கவுதம் அதானியும் நஷ்டத்தை சந்தித்துள்ளார். கடந்த 5 மாத காலத்தில் இவருடைய சொத்து மதிப்பு $9.8 பில்லியன் குறைந்துள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், சந்தை ஏற்ற இறக்கங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட பல காரணங்களின் காரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது சில அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த காரணங்களினால் தான் அம்பானியின் நிகர மதிப்பு சரிந்துள்ளது.
சுமார் ரூ. 2 லட்சம் கோடி சரிவைச் சந்தித்தாலும் பில்லியனர் இன்டெக்ஸ் ரேங்கிங்கில் முகேஷ் அம்பானி தொடர்ந்து தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். உலக அளவில் முதல் 15 பணக்காரர்களின் பட்டியலில் ஒருவராக இருக்கிறார். முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு 24 பில்லியன் டாலர்கள் குறைந்தாலும், கவுதம் அதானியின் நிகர மதிப்பு 9.8 பில்லியன் டாலர் மட்டுமே சரிந்துள்ளது. அம்பானியின் இழப்பு அதானின் இழப்பை விட கிட்டத்தட்ட 2.5 மடங்கு அதிகமாகும்.


Click it and Unblock the Notifications