அம்பானிக்கே ஆப்பா? 56,000 கோடி சொத்து காலி! 12 ஆண்டுகளில் இல்லாத பங்கு விலை சரிவு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் சுமாராக 1940 புள்ளிகள் சரிந்து ஒட்டு மொத்த முதலீட்டாளர்களையும் கதி கலங்க வைத்து இருக்கிறது.

இது சென்செக்ஸ் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செம அடி வாங்கி இருக்கிறது. அதனால் அண்ணண் அம்பானி சில பல பில்லியன்கள் சொத்து மதிப்பை இழந்து இருக்கிறார்.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து இருக்கிறது. மறு பக்கம் கச்சா எண்ணெய்யை அதிக அளவில் வாங்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையும் பயங்கரமாக சரிந்து இருக்கிறது. இதனால் அம்பானிக்கு சுமார் 7.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்பே சரிந்து இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அம்பானி சொத்து மதிப்பு

அம்பானி சொத்து மதிப்பு

ஃபோர்ப்ஸ் பத்திரிகையில், கடந்த மார்ச் 2019 நிலவரப்படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 50.0 பில்லியன் டாலராக இருந்ததாம். ஆனால் இப்போது வெறும் 42.2 பில்லியன் டாலர் தன் அவரின் சொத்து மதிப்பாக இருக்கிறதாம். ஆக 7.8 பில்லியன் டாலர் சொத்து காற்றில் கரைந்து போய் இருக்கிறது.

எப்படி

எப்படி

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு விலை, கடந்த 20 டிசம்பர் 2019-ல் உச்ச விலையாக, 1,617 ரூபாயைத் தொட்டது. ஆனால் இன்று ரிலையன்ஸின் பங்கு விலை சுமாராக 1,115-ல் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ரிலையன்ஸ் பங்கு விலை உயர திணறியது என்றே சொல்லலாம்.

12 ஆண்டுகளில் இல்லாத சரிவு

12 ஆண்டுகளில் இல்லாத சரிவு

கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை இன்று ஒரே நாளில், 166 ரூபாய் (13 சதவிகிதம்) சரிந்தது. ரிலையன்ஸின் உச்ச விலையான 1,617 ரூபாயில் இருந்து, 1,115 ரூபாய் என்றால் கடந்த 3 மாத காலத்துக்குள் சுமாராக 502 ரூபாய் சரிந்து இருக்கிறது.

சந்தை மதிப்பு சரிவு

சந்தை மதிப்பு சரிவு

கடந்த, டிசம்பர் 2019-ல் ரிலையன்ஸின் சந்தை மதிப்பு சுமாராக 10 லட்சம் கோடி என்று வைத்துக் கொள்வோம். இப்போது 7.05 லட்சம் கோடி ரூபாய் தான் ரிலையன்ஸின் சந்தை மதிப்பாக இருக்கிறது. ஆக 10.00 - 7.05 = 2.95 லட்சம் கோடி ரூபாய் நம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு காணாமல் போய் இருக்கிறது.

பங்குதாரர்

பங்குதாரர்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் சுமாராக 48 சதவிகித பங்குகளை நம் முகேஷ் அம்பானி தான் வைத்திருக்கிறார். இது இவரின் சொத்து மதிப்பை பெரிய அளவில் உயர்த்த காரணமாக இருந்து வருகிறது. இந்த ரிலையன்ஸ் பங்கு கடந்த டிசம்பர் 2019-ல் உச்சத்தில் இருந்த போது, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 60.8 பில்லியன் டாலரை வரை தொட்டது.

அதே பங்கு தான் வீழ்ச்சி

அதே பங்கு தான் வீழ்ச்சி

இப்போது அதே ரிலையன்ஸ் பங்கின் விலை 1,617 ரூபாயில் இருந்து 1,115 ரூபாய்க்கு சரிந்து இருப்பதால், தற்போது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 42.2 பில்லியன் டாலருக்கு சரிந்துவிட்டது. ஆக 7.8 பில்லியன் டாலர் நஷ்டம் கண்டு இருக்கிறார். இந்திய மதிப்பில் சுமாராக 56,000 கோடி ரூபாயை இழந்து இருக்கிறார். ஆனாலும் முகேஷ் அம்பானி கவலைபட்டதாகத் தெரியவில்லை. ஏன் என்றால் அவர் முகேஷ் அம்பானி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

mukesh ambani lost around Rs 56000 crore 12 year fall in reliance share

The asia's richest man mukesh ambani lost around 7.8 billion dollar (In Indian value its Rs 56,000 crore) due to reliance industries share price worst fall happened today in the last 12 years.
Story first published: Monday, March 9, 2020, 21:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X