மணிக்கு ரூ.90 கோடி சம்பாத்தியம்.. லாக்டவுன் ஆரம்பத்திலிருந்து அசத்தும் முகேஷ் அம்பானி.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, கொரோனா காலத்தில் ஒரு மணி நேரத்திற்கு 90 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.

IIFL wealth harun india rich list 20ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி லாக்டவுன் ஆரம்பத்திலிருந்து மணிக்கு ரூ.90 கோடி சம்பாதித்து வருவதாக IIFL wealth harun india rich list 2020ன் படி தெரிய வந்துள்ளது. இந்த காலகட்டத்தில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பானது 2,77,000 கோடி அதிகரித்து, 6,58,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது இந்த நிறுவனத்தின் வளர்ச்சியினை சுட்டிக் காட்டுகிறது. 20ன் படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கவனிதக்க விஷயம் என்னவெனில் இன்று நேற்றல்ல, கடந்த 9 ஆண்டுகளாகவே இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டத்தினை முகேஷ் அம்பானி பெற்றுள்ளார்.

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பானது 2,77,000 கோடி அதிகரித்து, 6,58,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே தனது நிறுவனத்தினை விரிவுபடுத்தும் பொருட்டு, உலகளாவிய அளவில் நிதிகளை திரட்டி வருகின்றார். இதனால் கடனில்லா நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ், தற்போது மிகப்பெரிய வளர்ச்சியினைக் கண்டு வருகின்றது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

இந்த நிலையில் அமெரிக்காவின் முதலீட்டு நிறுவனமான சில்வர் லேக் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வர்த்தகத்தில் 7,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கிடையில் அந்த நிறுவனத்தின் மதிப்பு 4.21 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. முன்னதாக தனது நிறுவனத்தினை மேம்படுத்தும் பொருட்டு, சமீபத்திய மாதங்களில் 20 பில்லியன் டாலர்களை முகேஷ் அம்பானி திரட்டினார்.

அதிகரிக்கும் செல்வாக்கு

அதிகரிக்கும் செல்வாக்கு

63 வயதான இந்த தொழிலதிபர் தொழில் நுட்பம் மற்றும் சில்லறை விற்பனை வளர்ச்சியினை மேம்படுத்த திட்டமிட்டு வருகின்றார். இவர் எந்த வணிகத்தினை மேம்படுத்த திட்டமிட்டு, முதலீட்டினை பெற திட்டமிட்டாலும், சர்வதேச நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. இதனால் அம்பானியின் செல்வாக்கும் இன்னும் அதிகரிக்கும். ஏனெனில் இந்தியா ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையினை கொண்ட மிகப்பெரிய சந்தையாகும்.

IIFL wealth பட்டியல் 2020

IIFL wealth பட்டியல் 2020

IIFL wealth harun india rich list 2020ல் 1,000 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்து மதிப்பு கொண்டவர்கள் 828 பேர் உள்ளனர். இது ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாகும். மேலும், 100 கோடி டாலருக்கும் அதிகமான, சொத்து மதிப்பு கொண்டவர்கள் எண்ணிக்கை, 179 பேராகும். இது, கடந்த 2013ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, முன்று மடங்கு அதிகரிப்பாகும்.

சொத்து மதிப்பு குறைவு

சொத்து மதிப்பு குறைவு

அதோடு மேற்கண்ட 828 பேரின் இந்த பட்டியலில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 627 பேரின் சொத்துக்கள் அதிகரித்துள்ளது. இதே 229 பேரின் சொத்து மதிப்புகள் குறைந்துள்ளது. குறிப்பாக 75 பேர்கள், இம்முறை பட்டியலிலேயே இடம் பெறவில்லை. முந்தைய பட்டியலில் இடம் பிடித்திருந்தவர்களில் 6 பேர் இறந்து விட்டனர்.

ரிலையன்ஸ் இன்றைய பங்கு விலை நிலவரம்

ரிலையன்ஸ் இன்றைய பங்கு விலை நிலவரம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 6 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து 2250 ரூபாயாக காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஏற்றம் காணத் தொடங்கிய இந்த பங்கின் விலையானது, தற்போது வரை ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. இந்த மாதத்தில் 2,300 ரூபாய்க்கு மேலே சென்ற இந்த பங்கின் விலையானது, இன்னும் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh ambani making Rs.90 crore an hour since corona lockdown

Reliance industries chairman Mukesh ambani making Rs.90 crore an hour since corona lockdown
Story first published: Wednesday, September 30, 2020, 14:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X