கம்மி விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்.. முகேஷ் அம்பானியின் சூப்பர் திட்டம்..!

இந்திய டெலிகாம் சந்தையை மொத்தமாகப் புரட்டிப்போட்ட முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ 2022ஆம் ஆண்டுக்குள் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய வேண்டும் எனப் பல கோடி முதலீடு செய்து ஸ்பெக்ட்ரம், 5ஜி கருவிகளை வாங்கித் தயாராக உள்ளது. இதேவேளையில் குவால்கம் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பமும் தயாராக உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவை பிரிவில் குறுகிய காலகட்டத்தில் பெரிய அளவிலான வர்த்தகத்தையும் வருமானத்தையும் பெற வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் முகேஷ் அம்பானி ஒரு முக்கியமான திட்டத்தைத் தீட்டியுள்ளார்.

ஜியோ 5ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை

ஜியோ 5ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை

2022ஆம் நிதியாண்டின் இறுதிக்குள் இந்தியாவில் 5ஜி டெலிகாம் சேவைகளை அறிமுகம் செய்யத் தீவிரமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ இப்பிரிவில் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் எனத் திட்டமிட்டு 2022 நிதியாண்டின் 2வது காலாண்டில் மலிவு விலையில் 5ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ.

300 மில்லியன் வாடிக்கையாளர்கள்

300 மில்லியன் வாடிக்கையாளர்கள்

இந்தியாவில் 3ஜி, 4ஜி சேவை எனப் பல அதிநவீன டெலிகாம் சேவைகள் வந்தாலும் சுமார் 300 மில்லியன் வாடிக்கையாளர்கள் இன்னமும் பியூச்சர் போன்களை மட்டுமே பயன்படுத்தித் தொடர்ந்து 2ஜி சேவை தளத்திலேயே உள்ளனர்.

சீப் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்

சீப் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்

இப்பிரிவு வாடிக்கையாளர்களை நேரடியாக 5ஜி சேவை பிரிவுக்குள் கொண்டு வர வேண்டும் என முக்கியமான இலக்குடன் மிகவும் குறைவான விலையில் 5ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளது ரிலையன்ஸ் ஜியோ.

கூகிள் உடன் கூட்டணி

கூகிள் உடன் கூட்டணி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கூகிள் முதலீடு செய்து முக்கியக் கூட்டணி நிறுவனமாக மாறியுள்ள நிலையில், ஜியோ மற்றும் கூகிள் கூட்டணியில் மலிவான விலையில் 5ஜி ஸ்மார்ட்போனுக்கான R&D பணிகள் மே-ஜூன் மாதத்தில் முடிவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது வெற்றி அடையும் நிலையில் சில நாட்களில் உற்பத்தி பணிகள் துவங்கி மலிவான 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

5ஜி போன் - 5ஜி சேவை

5ஜி போன் - 5ஜி சேவை

இதன் மூலம் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் நடக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வருடாந்திர கூட்டத்தில், கூகிள் நிறுவன கூட்டணியில் தயாரிக்கப்பட்ட மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்தக் காலகட்டத்திற்குள் 5ஜி சேவையையும் ஜியோ அறிமுகம் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோபுக் அறிமுகம்

ஜியோபுக் அறிமுகம்

இதேபோல் நீண்ட காலமாக ரிலையன்ஸ் ஜியோ இந்திய கல்வி துறையை இலக்காக வைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் குறைவான விலையில் தயாரிக்கத் திட்டமிடப்பட்ட லேப்டாப்-ம் இந்த வருடாந்திர கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஜியோபுக் என அழைக்கப்படும் இந்த லேப்டாப் இந்திய எலக்ட்ரானிக்ஸ் சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்

முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்

இதன் மூலம் 2022 நிதியாண்டின் ரிலையன்ஸ் ஜியோவின் வருடாந்திர கூட்டம் ஜியோபோன், ஜியோபுக் ஆகியவை அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் ரிலையன்ஸ் அதிகாரப்பூர்வமாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை பிரிவில் நுழையும். இது ரிலையன்ஸ் ஜியோவுக்கு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பை உருவாக்கித்தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+