இந்திய தொலைக்காட்சி துறையின் இரண்டு முன்னணி நிறுவனங்களான ஸ்டார் இந்தியா மற்றும் வியாகாம் 18 இணைப்பு திட்டம், இந்திய போட்டி ஆணையத்தின் கடுமையான கண்காணிப்பில் உள்ளது. இந்த இணைப்பு நடைபெற்றால், ஹிந்தி பொழுதுபோக்கு சேனல்கள், கன்னட, மராத்தி மற்றும் பங்களா மொழி சேனல்கள் ஆகியவற்றில் 40% க்கும் அதிகமான சந்தை பங்கை இந்த கூட்டணி நிறுவனம் கைப்பற்றும் என்பதால், போட்டி ஆணையம் இந்த இணைப்பிற்கு ஒப்புதல் அளிப்பதில் பல்வேறு கட்ட ஆய்வை நடத்தி வருகிறது.
இந்தியாவில் எந்தொரு துறையாக இருந்தாலும் ஒரு நிறுவனம் 40 சதவீதத்திற்கும் அதிகமான சந்தை பங்கீட்டை வைத்திருந்தால் அது ஆதிக்க நிலையைக் குறிக்கும் விஷயமாக CCI அமைப்பு பார்க்கிறது. இத்தகைய மோனோபோலி நிலையை சந்தையில் தடுப்பது CCI அமைப்பின் முக்கிய பணியாக இருக்கும் வேளையில் ஸ்டார் இந்தியா மற்றும் வியாகாம் 18 இணைப்பு கேள்விக்குறியாக நிற்கிறது.

இதனால் ஸ்டார் இந்தியா மற்றும் வியாகாம் 18 நிறுவனங்கள் தங்களுடைய ஹிந்தி மற்றும் சில பிராந்திய மொழி சேனல்களை மூட முன்வருவதாக CCI அமைப்பிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதோடு இந்த இணைப்பின் மூலம் உருவாகும் மாபெரும் நிறுவனம், கிரிக்கெட் மற்றும் பிற விளையாட்டு போட்டிகளின் ஸ்ட்ரீமிங் உரிமைகளை கையில் வைத்திருக்கும் காரணத்தால் இதில் மொத்தமாக மோனோபோலியாக உள்ளது. இதை CCI அமைப்பு எப்படி கையாள போகிறது என்பது அடுத்த முக்கிய கேள்வியாக உள்ளது.
போட்டி ஆணையத்தின் கடும் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து ஸ்டார் மற்றும் வியாகாம் 18 நிறுவனங்கள், தங்களது முக்கிய சேனல்களை மூடிவிட்டு தனது முக்கியமான ஸ்டார் பிளஸ் மற்றும் கலர்ஸ் பிராண்டுகளை பாதுகாப்பதற்கான முயற்சிகள் தான் இது.
ஸ்டார் மற்றும் வியாகாம் 18 மத்தியிலான இணைப்பு அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், போட்டி ஆணையத்தின் ஒப்புதல் கிடைப்பது எளிதான காரியமில்லை. இந்த இணைப்பு தொலைக்காட்சி துறையின் போட்டி சூழலை பாதிக்கும் என்பதால், போட்டி ஆணையம் மற்ற ஊடக நிறுவனங்களின் கருத்துகளையும் கேட்டு வருகிறது.
இந்த இணைப்பின் மூலம் உருவாகும் புதிய நிறுவனத்தில் ரிலையன்ஸ் 56% பங்கும், டிஸ்னி 37% பங்கும் வைத்திருக்கும். இந்த புதிய நிறுவனத்தில் 110க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா ஆகிய இரண்டு ஸ்ட்ரீமிங் தளங்கள் இடம்பெறும்.
ஜேம்ஸ் முர்டாக் மற்றும் உதய் சங்கர் ஆகியோர் துவக்கிய போதி டிரீ சிஸ்டம்ஸ் நிறுவனம், புதிய நிறுவனத்தில் 7% பங்கை வைத்திருக்கும்.
முன்னாள் ஸ்டார் இந்தியா தலைவரான உதய் சங்கர், புதிய நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி தலைவராகவும் இருப்பார்.
இந்த இணைப்பு நிறைவேறும் பட்சத்தில், இந்திய தொலைக்காட்சி துறையில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்கு முன் போட்டி ஆணையத்தின் தடையைத் தாண்ட வேண்டும் என்பது பெரும் சவாலாக உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications