டைம்ஸ் குழுமத்திற்கு தனது சொத்தை விற்க முகேஷ் அம்பானி ஆர்வம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: முகேஷ் அம்பானி தலைமையிலான நிறுவனங்களில் ஒன்றான, 'நெட்வொர்க் - 18 மீடியா அண்டு இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தினை, டைம்ஸ் குழுமத்திற்கு விற்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக இதைப் பற்றிய தெரிந்த நபர்கள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தனது பணத்தை இழந்து வரும் வணிகத்தை முடித்துக் கொள்ள விரும்புவதாகவும், இதனால் இந்த நிறுவனத்தை விற்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்துள்ளதாகவும் பிசினஸ் ஸ்டேண்டர்டு பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது.

டைம்ஸ் குழுமத்திற்கு தனது சொத்தை விற்க முகேஷ் அம்பானி ஆர்வம்..!

டைம்ஸ் ஆப் இந்தியாவின் வெளியீட்டாளரான பென்னட் கோல்மன் & கோ.. நிறுவனத்திற்கு, அம்பானியின் நெட்வொர்க் 18 மீடியா & இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்தினை வாங்கலாம் எனவும் எதிர்பார்க்கிறது.

மேலும் இது குறித்து முகேஷ் அம்பானி பல்வேறு திட்டங்களை பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தான பேச்சுகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னரே நெட்வொர்க் 18 மீடியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க, ஜப்பானிய நிறுவனமான, சோனி விருப்பம் தெரிவித்தது.

அள்ளிக் கொடுத்த தானி..! அச்சச்சோ... மிஸ் பண்ணிட்டீங்களா..?அள்ளிக் கொடுத்த தானி..! அச்சச்சோ... மிஸ் பண்ணிட்டீங்களா..?

டோக்கியோவை அடிப்படையாக கொண்ட சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா' நிறுவனம் இது குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.

அதிலும் சோனி நிறுவனம் பலவிதமான விருப்பங்களை முன்வைத்ததாகவும், ஒன்று நெட்வொர்க் - 18 நிறுவனத்தில் பங்குகளை பெறுவது அல்லது சோனி நிறுவனத்தின் இந்திய வணிகத்தை நெட்வொர்க் - 18 நிறுவனத்துடன் இணைப்பது என பலவித விருப்பங்களை முன்வைத்தது எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்குகள் 3 சதவிகிதம் உயர்ந்து 30 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. முன்னதாக அம்பானியின் எண்ணெய் நிறுவனத்திற்கான பங்குகளை சவுதி அராம்கோ அண்மையில் முகேஷ் அம்பானி விற்றது நினைவு கூறத்தக்கது.

கடந்த 2014ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸால் கையகப்படுத்தப்பட்டது தான் நெட்வொர்க் 18. செய்தி மற்றும் பொழுது போக்குகளில் பரவியுள்ள 56 உள்ளூர் சேனல்களை சொந்தமாகக் கொண்டு இயங்கி வருகிறது. செய்தி வகையில் மணி கண்ட்ரோல், நியூஸ் 18, என்பிசி டிவி18.காம், கிரிகெட்நெக்ஸ்ட் மற்றும் பர்ஸ்ட்போஸ்ட் ஆகியவை இதில் அடங்கும்.

இதே அதன் துணை நிறுவனமான டிவி18 பிராட்காஸ்ட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் மும்பையில் 6.7 சதவிகிதமாக உயர்ந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் நெட்வொர்க் 18 விற்பனை குறித்து, டைம்ஸ் குழுமத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh ambani may sell network 18 to Times group

Mukesh ambani may sell network 18 to Times group. And Ambani is considering various options, ranging from an outright exit to a stake sale.
Story first published: Thursday, November 28, 2019, 15:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X