கத்தாரில் டிரம்பை சந்தித்த முகேஷ் அம்பானி.. 5 மாதங்களில் 2ஆவது முறையாக சந்திப்பு.. எதற்காக..?

கத்தார்: இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்தார். கடந்த 5 மாதங்களில் இரண்டாவது முறையாக நடக்கும் சந்திப்பு இது.

கத்தார் நாட்டு அரசு சார்பாக நடத்தப்பட்ட விருந்து நிகழ்வில் தான் இந்த சந்திப்பு நடைபெற்று இருக்கிறது. கத்தாரின் தோஹா நகரில் இருக்கும் அரசு மாளிகையில் விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கத்தார் நாட்டு அரசு சார்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்து நிகழ்வில் அதிபர் டிரம்ப் ,அமெரிக்க அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.

கத்தாரில் டிரம்பை சந்தித்த முகேஷ் அம்பானி.. 5 மாதங்களில் 2ஆவது முறையாக சந்திப்பு.. எதற்காக..?

அப்போது தான் டிரம்ப் மற்றும் அம்பானி இடையிலான சந்திப்பு நடைபெற்று இருக்கிறது. இந்த விருந்தில் கலந்து கொள்வதற்கு சென்ற முகேஷ் அம்பானி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கத்தாரின் தலைவரான எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி ஆகியோரை சந்தித்து கைக்குலுக்குகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. அதேபோல அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சருடனும் அனில் அம்பானி நட்புடன் கலந்துரையாடுகிறார்.

முகேஷ் அம்பானியை பொறுத்தவரை அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்துக்கு உட்பட்ட நிறுவனங்களில் கத்தார் நாட்டு அரசு தனது பல்வேறு நிதியங்கள் மூலம் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் கத்தாரின் தலைவரான எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார். அப்போது இந்தியாவில் தங்களுடைய நாடு பல்வேறு துறைகளில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை முதலீடு செய்யும் என கூறியிருந்தார்.

முகேஷ் அம்பானியை பொறுத்தவரை கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்திருக்கிறார். இதற்கு முன்பு ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது முகேஷ் அம்பானி தன்னுடைய மனைவி நீதா அம்பானியுடன் சென்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கக்கூடிய முகேஷ் அம்பானிக்கு 107.3 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்து இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெட்ரோ கெமிக்கல், எண்ணெய் மற்றும் எரிவாயு ,தொலைதொடர்பு, ரீடெய்ல், ஊடகம் மற்றும் நிதி சேவைகள் என பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாக கால் பதித்து இயங்கி வருகிறது. முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும் உலக பணக்காரர்கள் பட்டியலில் பதினெட்டாவது இடத்திலும் இருக்கிறார்.

FAQs
இதற்கு முன்பு அம்பானி மற்றும் டிரம்ப் சந்திப்பு எங்கு நடந்தது?

ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது முகேஷ் அம்பானி தன்னுடைய மனைவி நீதா அம்பானியுடன் சென்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அம்பானி கடந்த 5 மாதங்களில் எத்தனையாவது முறையாக டிரம்பை சந்திக்கிறார்?

முகேஷ்  அம்பானி கடந்த 5 மாதங்களில் இரண்டாவது முறையாக டிரம்பை சந்திக்கிறார்.

முகேஷ் அம்பானி , டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பு எங்கு நடந்தது?

கத்தார் நாட்டின் தோஹா  நகரில் கத்தார் அரசு சார்பாக வழங்கப்பட்ட விருந்து நிகழ்ச்சியில்  முகேஷ் அம்பானி , டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பு நடந்தது.

GoodReturns Finance

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+