மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கடந்த சில நாட்களாகப் பெருமளவிலான சரிவைச் சந்தித்தாலும், ஜனவரி மாதத்தில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த வளர்ச்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு மட்டும் சுமார் 3 சதவீத உயர்வை எட்டியுள்ளது. இதனால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 79.2 பில்லியன் டாலர் வரையிலான உயர்ந்து உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 13வது இடத்தில் இருந்து 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

முகேஷ் அம்பானி ஜனவரி மாதத்தில் ஆரக்கிள் நிறுவனத்தின் தலைவரான லேரி எலிசன் மற்றும் லொரியல் நிறுவனத்தின் தலைவரும், உலகின் பணக்கார பெண்ணாக விளங்கும் Francoise Bettencourt Meyers ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 5.78 லட்சம் கோடி ரூபாய், அதாவது 79.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதற்கிடையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓவான ஸ்டீவ் பால்மர் 81.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 11வது இடத்தில் இருந்து முன்னேறி 10வது இடத்திற்கு முன்னேறி, டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டிசம்பர் 31ஆம் தேதி உடன் முடிந்த காலாண்டில் சந்தை கணிப்புகளை உடைத்து சுமார் 12.5 சதவீத வளர்ச்சியில் சுமார் 13,101 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. ஆனால் வருவாய் 22 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் திங்கட்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் பங்கு மதிப்பு குறைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
மேலும் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு 202 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார்.
எலான் மஸ்க் அவர்களைத் தொடர்ந்து அமேசான் தலைவர் ஜெப் பிசோஸ் 192 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2வது இடத்திலும், பில் கேட்ஸ் 133 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3வது இடத்திலும் உள்ளது. இவர்களைத் தொடர்ந்து 4வது இடத்தில் லூயிஸ் விட்டான் குரூப் தலைவர் பெர்னார்டு அர்னால்டு 112 பில்லியன் டாலர் உடனும், 5வது இடத்தில் 104 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடனும் மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications