ஆசியாவின் பணக்கார தொழிலதிபராக இருக்கும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் இந்தியா வர்த்தகத்தை பணம் மற்றும் பங்கு வாயிலாக வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யும் பேச்சுவார்த்தையில் நெருங்கி விட்டதாக எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
வால்ட் டிஸ்னி நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் மாட்டிக்கொண்டு இருப்பது உண்மை தான், ஐபிஎல் பிராட்காஸ்டிங் ஒப்பந்தத்தை இழந்த பின்பு வாடிக்கையாளர், வருமானம் என அனைத்தும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.

இந்த நிலையில் வால்ட் டிஸ்னி இந்திய வர்த்தகத்தை விற்கவும் அல்லது பகுதி உரிமையை விற்கவும் கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. ஆனால் கட்டாயம் வால்ட் டிஸ்னி தனது சக போட்டி நிறுவனத்திடம் விற்க வாய்ப்பு இல்லை என கூறப்பட்ட நிலையில் தற்போது ரிலையன்ஸ் கைப்பற்றுவதாகவும், இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி-க்கு சொந்தமான டிஸ்னி ஸ்டார் இந்திய வணிகம் சுமார் $10 பில்லியன் மதிப்புடையது. இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 7 பில்லியன் டாலர் முதல் 8 பில்லியன் டாலர் வரை இதன் சொத்துக்களை மதிப்பிடுவதாகவும், இந்த மதிப்பீட்டில் நிறுவனத்தை வாங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கட்டுப்பாட்டில் சில மீடியா நிறுவனங்கள் இருக்கும் வேளையில் டிஸ்னி ஸ்டாருடன் இணைக்கப்பட்டதன் மூலம் இத்துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்த முடியும். மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அடுத்த மாத தொடக்கத்தில் கையகப்படுத்தல் அறிவிக்கப்படலாம் என்று தகவல் கிடைத்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், பண மற்றும் பங்கு பரிமாற்ற பரிவர்த்தனை முடிந்த பிறகு டிஸ்னி இந்திய நிறுவனத்தில் சிறு அளவிலான பங்குகளை மட்டும் வால்ட் டிஸ்னி வைத்திருக்கும். இதுகுறித்து டிஸ்னியின் பிரதிநிதி பதிலளிக்கவில்லை மற்றும் ரிலையன்ஸின் செய்தித் தொடர்பாளரும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications