இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார அம்பானி குடும்பம் என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது யார் வேண்டுமானாலும் இந்திய தொழிற்துறையில் வெற்றி அடைய முடியும், குறிப்பாக பெரும் பணம் பலம் இல்லாமல் வெற்றி அடைய முடியும் என்பதை படம் போட்டுகாட்டிய ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் நிறுவனரும் திருபாய் அம்பானி மற்றும் தற்போது உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி.
திருபாய் அம்பானி மற்றும் கோகிலாபென் அம்பானிக்கு மொத்தம் 4 பிள்ளைகள் அதில் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோரை அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர்களது சகோதரிகளான தீப்தி சல்கோகர் மற்றும் நினா கோத்தாரி-ஐ மிகவும் சிலருக்கு மட்டுமே தெரியும்.

தீப்தி சல்கோகர் வி.எம். சல்கோகர் குழுமத்தின் உரிமையாளரான தத்தராஜ் சல்கோகர் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு விக்ரம் சல்கோகர் என்ற மகனும், இஷெட்டா சல்கோகர் என்னும் மகளும் உள்ளனர்.
வி.எம். சல்கோகர் குழுமம் இரும்புத் தாது, நிலக்கரி மற்றும் காற்றாலை ஆகியவை நிறுவனத்தின் முதன்மை வர்த்தக பிரிவுகளாக உள்ளது. இதில் விக்ரம் சல்கோகர் கடந்த சில வருடங்களாக வி.எம். சல்கோகர் குழுமத்தின் முக்கியமான நிர்வாக பொறுப்புகளை எற்று அசத்த துவங்கியுள்ளார்.
விக்ரம் சல்கோகர் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பிபிஏ படித்தார். வார்டன் கல்லூரியின் பட்டதாரியான விக்ரம் சல்கோகர் படிக்கும் போதே பெரும் பகுதி நேரத்தை தொழிலுக்காக இந்தியாவிலும், படிப்பாக அமெரிக்காவிலும் பிரித்து அதிரடியாக செயல்பட்டார்.
விக்ரம் சல்கோகர் 2007 இல் McKinsey & கம்பெனியில் ஒரு பார்ட்னர் ஆக தனது கரியரை தொடங்கினார், பின்னர் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் வணிக மேம்பாட்டு மேலாளராக சேர்ந்தார். தற்போது V.N சல்கோகர் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநராக உள்ளார்.
விக்ரம் சல்கோகர் மீடியா வெளிச்சத்தில் இருந்து மறைந்தே இருக்கிறார், இவர் மட்டும் அல்லாமல் அவரது மொத்த குடும்பமும் பகட்டு வாழ்க்கை இல்லாமல் அமைதியாகவும், மீடியா வெளிச்சமும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். சொல்லப்போனால் விக்ரம் சல்கோகர் அம்பானி குடும்பத்தின் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதை பார்க்க முடியவில்லை.
தீப்தியின் கணவர் தத்தராஜ் சல்கோகர், கோவாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் Sunaparanta என்ற அமைப்பை நிறுவினார். தீப்தி நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக உள்ளார்.


Click it and Unblock the Notifications