இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானியின் மாபெரும் கனவு திட்டத்துடன் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் எண்ணெய், டெலிகாம், ரீடைல் என 3 முக்கிய வர்த்தகப் பிரிவுகள் இருக்கும் நிலையில், பல நாடுகளுடன் வர்த்தகம் செய்து வருகிறது.
இந்த 3 வர்த்தகப் பிரிவுகள் கீழ் பல முக்கியமான திட்டங்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செயல்படுத்தி வரும் நிலையில், ஐக்கிய அரபு நாடுகளில் மிக முக்கிய வர்த்தகப் பகுதியான அபுதாபியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதிதாக ஒரு நிறுவனத்தைத் துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டர்நேஷன்ல் லிமிடெட்
ஐக்கிய அரபு நாட்டின், அபுதாபி குளோபல் மார்கெட் சந்தையில் ரிலையன்ஸ் இண்டர்நேஷன்ல் லிமிடெட் என்ற புதிய நிறுவனத்தைத் துவங்கியுள்ளதாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.
1 மில்லியன் டாலர் முதலீடு
இப்புதிய ரிலையன்ஸ் இண்டர்நேஷன்ல் லிமிடெட் நிறுவனத்தை 1 மில்லியன் டாலர் முதலீட்டில் 1 டாலர் வீதம் 10 லட்சம் பங்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளதாகப் பங்குச்சந்தைக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் ரிலையன்ஸ் இண்டர்நேஷன்ல் லிமிடெட் 100 சதவீதம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கிளை நிறுவனமாகும்.
வர்த்தகத் திட்டம்
ரிலையன்ஸ் இண்டர்நேஷன்ல் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் கச்சா எண்ணெய், பெட்ரோலியம் பொருட்கள், பெட்ரோ கெமிக்கல், விவசாயப் பொருட்கள் ஆகிய பிரிவுகளில் வர்த்தகம் செய்ய உள்ளது. மேலும் இந்நிறுவனம் பதிவு மட்டுமே செய்யப்பட்டு உள்ளது, எவ்விதமான வர்த்தகத்தையும் துவங்கவில்லை.
முக்கியக் கேள்வி
ஏற்கனவே இந்தியாவில் பல நிறுவனங்களை வைத்திருக்கும் ரிலையன்ஸ் எதற்காக அபுதாபியில் புதிதாக ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருக்கிறது.
அபுதாபி அரசு நிறுவனம்
சில நாட்களுக்கு முன்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ஸ் தனது வர்த்தகத்தைத் தனியாகப் பிரித்து டெலிகாம் பிரிவை வெளிநாட்டில் ஐபிஓ மூலம் பட்டியலிடத் திட்டமிட்டது, ஆனால் அத்திட்டத்தில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை. இந்தச் சூழ்நிலையில் தான் ரிலையன்ஸ் அபுதாபி நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது.
புதிய தொழிற்சாலை
அபுதாபி நாட்டின் அரசு கச்சா எண்ணெய் நிறுவனமான அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி-யின் (ADNOC) எண்ணெய் தளம் அமைந்திருக்கும் அல் ருவாய்ஸ் பகுதியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் இணைந்து புதிதாக எத்திலீன் டைக்ளோரைடு தயாரிக்க ஒரு புதிய தொழிற்சாலை அமைக்க 2 வருடத்திற்கு முன்பு திட்டமிடப்பட்டு, சில மாதங்களுக்கு முன் இத்திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டது.
கூட்டணி நிறுவனம்
இப்புதிய தொழிற்சாலைக்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (ADNOC) புதிதாக ஒரு கூட்டணி நிறுவனத்தை உருவாக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்காகத் தான் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அபுதாபியில் புதிதாக ரிலையன்ஸ் இண்டர்நேஷன்ல் லிமிடெட் உருவாக்கப்பட்டு இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
தனியாக நிர்வாகம் செய்ய முடிவு
ரிலையன்ஸ் இண்டர்நேஷன்ல் லிமிடெட் மூலம் இப்புதிய தொழிற்சாலை வர்த்தகத்தைத் தனியாக நிர்வாகம் செய்ய முடியும். இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்திற்கு நேரடியாகப் பெரிய பாதிப்புகள் ஏற்படக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டு இருக்கக் கூடும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications