இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்தை கொண்ட முகேஷ் அம்பானி தனது திறமையால் நாள்தோறும் அதிகப்படியான வருமானத்தை ஈட்டி வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் பல துறைகளில் புதிய முதலீடுகளையும் அதிகளவில் செய்து வருகிறார். இதற்கிடையில், தற்போது பிரக்யராஜ் மகாகும்ப மேளாவிற்கும் பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி, மற்ற குடும்ப உறுப்பினர்களுடன், உலகின் மிக ஆடம்பரமான ரூ.15000 கோடி மதிப்பிலான வீடுகளில் ஒன்றான ஆன்டிலியாவில் வசிக்கின்றனர். பலரின் மனதில் எழும் ஒரு கேள்வி என்னவென்றால், எத்தனை தொழிலாளர்கள் உண்மையில் ஊழியர்களாக வேலை செய்கிறார்கள் என்பதுதான். அவர்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன. அதிக சம்பளம் எவ்வளவு என்ற தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்

அறிக்கைகளின்படி, முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் வீட்டில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை தாண்டி மருத்துவக் காப்பீடு மற்றும் பிற தொடர்புடைய சலுகைகள் போன்ற பெருநிறுவன ஊழியர்களைப் போன்ற சலுகைகளையும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.இந்த 500 ஊழியர்களும் அதிகப்படியான சம்பளத்தை பெற்று வருகின்றனர்.அவர்களின் பலரது மாத சம்பளம் சுமார் மாதத்திற்கே ரூ.1.5 முதல் ரூ.2 லட்சம் வரை இருக்கும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இவர்களின் இந்த ஊதியம் மற்றும் வசதிகள் அவர்களின் குறிப்பிட்ட பணிகளை பொறுத்து மாறுபடுகின்றன. இதில் அவர்களின் நிபுணத்துவம் மற்றும் பொறுப்புகளுக்கு நல்ல வெகுமதிகள் அளிக்கப்படுகின்றன. வீட்டு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு முதல் சமையல்காரர்கள் மற்றும் தனிப்பட்ட உதவியாளர்கள் வரை, ஒவ்வொரு ஊழியரும் வீட்டை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இதற்கிடையில், மகா கும்பமேளாவில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு சேவைகளை பக்தர்களுக்கு செய்து வருகிறது. அந்த வகையில், தீர்த் யாத்ரி சேவா' என்ற சேவையை தொடங்கியுள்ளது. அதாவது,
கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய புனித நீர்கள் பிரயாக்ராஜில் சங்கமிக்கும் வேளையில், மில்லியன் கணக்கான மக்கள் 2025 மகா கும்பமேளாவிற்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்கின்றனர். தெய்வீக அருளுக்கான வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பான இந்தப் பயணம் பலருக்கு சவாலாக இருக்கும்.
இதை உணர்ந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் யாத்ரீகர்களின் பயணத்தை எளிதாக்குவதற்கும், அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் இந்த சேவையை தொடங்கியுள்ளது.ரிலையன்ஸ் நிறுவனம், யாத்ரீகர்களுக்கு ஊட்டமளிக்கும் உணவு மற்றும் அத்தியாவசிய சுகாதாரப் பராமரிப்பு முதல் பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் தடையற்ற இணைப்பு வரை பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
தீர்த் யாத்திரிகர்களுக்கு சேவை செய்யும்போது, அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. அந்தவகையில், இதனை ரிலையன்ஸ் நிறுவனமும் பின்பற்றுகிறது. எனவேதான், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒரு நிகழ்வில், ஆன்மீகப் பயணத்தில் இருக்கும் யாத்ரீகர்களுக்கான ரிலையன்ஸ் குழுமத்தின் சேவைகள் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் அனந்த் அம்பானி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications