இந்திய பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டும் வளர்ச்சி பாதை நோக்கி திரும்பியுள்ளதால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர்ந்து அவர் மீண்டும் 100 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட நபர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை கண்டன. இதனால் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களின் பங்கு மதிப்புகளும் குறைந்தன. இதன் காரணமாக முகேஷ் அம்பானி , அதானி உள்ளிட்ட இந்திய பணக்காரர்கள் பலரது சொத்து மதிப்பும் சரிவடைந்தது. இந்த சூழலில் மார்ச் மாதம் மத்தியிலிருந்து பங்குச்சந்தைகள் படிப்படியாக மீண்டு எழுந்து வர தொடங்கி இருப்பதால் ரிலையன்ஸ் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் பங்கு மதிப்பும் வளர்ச்சி பாதையை நோக்கி திரும்பியுள்ளது.

இதனால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர்ந்து அவர் மீண்டும் 100 பில்லியன் டாலர்கள் கிளப்பில் இணைந்து இருக்கிறார். மார்ச் மாத தொடக்கத்தில் 81 பில்லியன் டாலர்களாக இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது 100 பில்லியன் டாலர்களாக உயர்ந்து இருக்கிறது என ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. அதாவது இந்த ஒன்றரை மாத காலத்தில் மட்டும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் கூடுதலாக 20 பில்லியன் டாலர்கள் சேர்ந்து இருக்கிறது.
இருந்தாலும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த ஜூலை மாதம் இருந்த உச்சத்தை இதுவரை அடையவில்லை. அதிலிருந்து 20% குறைவாக தான் இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் எட்டாம் தேதி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 120.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் கௌதம் அதானி. அவருடைய சொத்து மதிப்பு கடந்த மார்ச் மாதம் 63 பில்லியன் டாலர்களாக இருந்தது. தற்போது அதில் கூடுதலாக 14.5 பில்லியன் டாலர்கள் சேர்ந்து அவருடைய சொத்து மதிப்பு 77.5 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. இருந்தாலும் அவருடைய சொத்து மதிப்பு கடந்த ஜூன் மாதத்தில் இருந்த அளவைவிட 57 சதவீதம் குறைவாக இருக்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் தேதி கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 120.8 பில்லியன் டாலர்களாக இருந்தது.
அடுத்ததாக சன்ஃபார்மா நிறுவனத்தின் திலீப் சாங்க்வியின் சொத்து மதிப்பில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 4.9 பில்லியன் டாலர்கள் சேர்ந்து 28.82 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. பாரதி ஏர்டெல் சுனில் மிட்டலின் சொத்து மதிப்பிலும் 4.9 பில்லியன் டாலர்கள் சேர்ந்து 27.4 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. டி மார்ட் நிறுவனத்தின் தலைவரும் முதலீட்டாளருமான ராதாகிஷன் தமானி, ஜிண்டால் குழுமத்தின் சாவித்திரி ஜிண்டால், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனர் சிவ நாடார் உள்ளிட்டோரின் சொத்து மதிப்புகளும் கடந்த ஒரு மாத காலத்தில் 4 பில்லியன் டாலருக்கு மேல் உயர்ந்திருக்கிறது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications