இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் டெலிகாம் பிரிவான ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனமும், லக்சம்பர்கைச் சேர்ந்த எஸ்.ஈ.எஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் செயற்கைக்கோள்கள் வழியாக அதிவேக இண்டர்நெட் சேவைகளை வழங்கும் திட்டத்திற்கு முக்கியமான ஒப்புதல் கிடைத்துள்ளது.
ஏர்டெல் கூட்டணியைத் தொடர்ந்து இந்தியாவில் இப்பிரிவில் அனுமதி வாங்குவது யார் என்பதில் எலான் மஸ்க் ஸ்பேக்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் சேவைக்கும், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்திற்கும் பெரும் போட்டி நிலவியது. இதில் எலான் மஸ்க்-கிற்கு டேக்கா கொடுத்த முகேஷ் அம்பானி வென்றுள்ளார்.

முகேஷ் அம்பானி-யின் கூட்டணி இந்தியாவில் செயற்கைக்கோள்கள் வழியாக அதிவேக இண்டர்நெட் சேவைகளை வழங்க ஒப்புதல் பெற்றுள்ளது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் ஒரு அரசு அதிகாரி கொடுத்த தகவல் மையப்படுத்தி ராய்ட்டர்ஸ் இத்தகவலை வெளியிட்டு உள்ளது.
ராய்ட்டர்ஸ் அளித்துள்ள தகவல் படி இந்தியாவில் செயற்கைக்கோள் வழியாக இண்டர்நெட் சேவையை வழங்க 'ஆர்பிட் கனெக்ட் இந்தியா' என்ற நிறுவனத்திற்கு மூன்று ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியத் தேசிய விண்வெளி மேம்பாட்டு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் வழங்கிய இந்த அனுமதிகள், ஆர்பிட் கனெக்ட் நிறுவனம் இந்திய நிலப்பரப்புக்கு மேலே செயற்கைக்கோள்களை நிறுவுவதற்கு அனுமதி அளிக்கிறது.
இருப்பினும் செயற்கைக்கோள்கள் வழியாக அதிவேக இண்டர்நெட் சேவைகளை வழங்குவதற்கு முன்னர் மத்திய தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து கூடுதல் அனுமதிகள் பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் செயற்கைக்கோள் வாயிலாக இண்டர்நெட் சேவை வழங்கும் வர்த்தகத்தில் நுழைய பல நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகிறது. இதில் முக்கியமாக அமேசான் மற்றும் எலான் மஸ்க் நிறுவனத்தின் Starlink போன்ற நிறுவனங்களும் தற்போது அனுமதி கோரி வருகின்றன.
IN-SPACe தலைவர் பவன் கோயங்கா கூறுகையில், செயற்கைக்கோள்களை இயக்குவதற்கான அனுமதி இன்மார்சாட் மற்றும் பிற நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுதோறும் 36% வளர்ச்சியுடன், 2030 ஆம் ஆண்டில் ரூ.1.9 பில்லியன் வருவாய் ஈட்டும் துறையாக இந்திய செயற்கைக்கோள் பிராட்பேண்ட் துறை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications