இந்தியா, உலகின் மாபெரும் நுகர்வோர் சந்தைகளில் ஒன்று, இந்தியாவில் அனைத்து பொருட்களும், அனைத்து விலையிலும் வாடிக்கையாளர்களை பெற முடியும். இந்தியாவில் இருக்கும் மக்கள் அனைத்து வருமான பிரிவுகளிலும் பெரும் பகுதி வகிக்கும் காரணத்தால் ஒரு பொருளை 5 ரூபாய்க்கும் விற்க முடியும், அதே பொருளை 50000க்கும் விற்க முடியும்.
இப்படியிருக்கையில் புதிய வாடிக்கையாளர்களை சந்தையில் இருக்கும் போட்டிகளை கடந்து வேகமாக கைப்பற்றம் திறன் கொண்டு ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் புதிதாக ஒரு வர்த்தகத்தில் இறங்க உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இப்பிரிவில் டாடா, பெப்சி, கோகோ கோலா என பல மாபெரும் சாம்ராஜ்ஜியங்கள் ஆதிக்கம் செலுத்துகிறது.

ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட், புதியதாக பேக்கேஜ் தண்ணீர் பாட்டில் விற்பனையில் இறங்க உள்ளது. இதுக்குறித்த தகவல்கள் சில நாட்களுக்கு முன்பே வெளியானலும், தற்போது ரிலையன்ஸ்-ன் மூத்த அதிகாரி ஒருவர் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
ரிலையன்ஸ் கன்ஸ்யூமர்ஸ், தண்ணீர் பாடிட்ல் வர்த்தகத்திற்காக புதிய பிராண்ட்-ஐ அறிமுகம் செய்துள்ளது, இதன் பெயர் கம்பா சியூரை (Campa Sure). இந்தியாவில் பாட்டில் தண்ணீர் சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தையாகும். சீனா நாட்டில் டாப் 10 பில்லியனர்களில் ஒருவரான Zhong Shanshan என்பவர் Nongfu Spring என்ற தண்ணீர் பிராண்ட் மூலமாகவே பெரும் வெற்றியை கண்டார். இந்த வழியில் தற்போது முகேஷ் அம்பானியும் வருகிறார்.
இந்திய பாட்டில் தண்ணீர் சந்தை என்பது பெரும் தலைகள் சில இருந்தாலும், இத்துறை பல சிறு மற்றும் குறு நிறுவனங்களின் ஆதிக்கத்திலேயே உள்ளது. கம்பா சியூர், குறைந்த விலையில் உயர்தர தூய்மையான தண்ணீரை வழங்கி, நாட்டின் மூலை முடுக்குகளிலும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அக்டோபர் 2025 முதல் நாடு முழுவதும் விற்பனைக்கு வரும் இந்த பிராண்ட், வட இந்தியாவில் முதலில் தொடங்கி, பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. கம்பா சியூர் விலை சக போட்டி நிறுவனங்களை காட்டிலும் 20-30% குறைவாக இருக்க வேண்டும் என்பது தான் முகேஷ் அம்பானியின் திட்டம்.
இத்திட்டத்தை செயல்படுத்த முகேஷ் அம்பானி நிர்வாகம் நாடு முழுவதும் உள்ள சிறு நிறுவனங்களுடன் கூட்டணி முறையில் இணைந்து செயல்படுத்த உள்ளது. ரிலையன்ஸ், கம்பா சியூரின் உற்பத்தியை வேகமாக விரிவுபடுத்த, ஏராளமான பிராந்திய சுத்திகரிப்பு தண்ணீர் உற்பத்தியாளர்களுடன் கூட்டு சேர முடிவு செய்துள்ளது.

இந்த கூட்டணி மூலம் பாட்டில் தயாரிப்பில் துவங்கி பேகேஜிங், மார்கெட்டிங் வரையில் அனைத்து பிரிவுகளிலும் ரிலையன்ஸ் தனது தொழில்நுட்பத்தை பரிமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் ரிலையன்ஸ் இக்கூட்டணி நிறுவனங்களை வாங்க திட்டமில்லை என்று முன்கூட்டியே தெளிவுபடுத்தியுள்ளது. இந்த செயல் முறையை ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் டி கிருஷ்ணகுமார் உறுதி செய்துள்ளார். இதனால் கேம்பா சியூர் வேகமாக சந்தையில் விரிவாக்கம் செய்யப்படும், அதேவேளையில் அனைத்து கூட்டணி நிறுவனங்களிலும் சுத்திகரிப்பு தரத்தை கடுமையான கட்டுப்பாடுகள் உடன் நிலைநிறுத்த முடிவு செய்துள்ளது.
கம்பா சியூரின் விலை 250 மில்லி லிட்டர் பாட்டில் ரூபாய் 5 முதல் தொடங்கி, 500 மில்லி லிட்டர் ரூபாய் 8, ஒரு லிட்டர் ரூபாய் 15, இரண்டு லிட்டர் ரூபாய் 25 என விலைகளில் விற்க முடிவு செய்துள்ளன.
உதாரணமாக, ஒரு லிட்டர் கம்பா சியூர் தண்ணீர் பாட்டில் தற்போது 15 ரூபாயில் கிடைக்கும், அதே நேரம் பிஸ்லெரி, கோகா-கோலாவின் கின்லி மற்றும் பெப்சிகோவின் ஆக்வாஃபினா ஆகியவை ரூபாய் 20-இல் விற்கின்றன. இரண்டு லிட்டர் பேக் ரூபாய் 25-இல் கிடைக்க, மற்ற பிராண்டுகள் 30 முதல் 35 வரை வசூலிக்கின்றனர்.
இந்த குறைந்த விலை உத்தி தான் கேம்பா பிராண்டின் குளிர்பானத்திற்கு பெரிய அளவில் உதவியது. தற்போது இதை ஐடியாவை தண்ணீர் பாட்டில் வர்த்தகத்திற்கும் முகேஷ் அம்பானி பயன்படுத்துகிறார். மேலும் இதை ரிலையன்ஸ் ரீடெய்ல், ஜியோமார்ட் மற்றும் ரிலையன்ஸ் ஸ்மார்ட் போன்ற ரீடைல் பிரிவுகளிலும் விநியோகிக்கப்பட உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications