சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனம் இன்று மாலை ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இக்காலாண்டில் ரிலையன்ஸ் ஒருங்கிணைந்த லாப அளவீட்டில் சற்றும் எதிர்பாராத விதமாகக் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 5% சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. சந்தை கணிப்புகளில் கூட இத்தகைய நிலை வரும் என அதிகளவில் கணிக்கப்படவில்லை.
இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜூன் காலாண்டில் தனது லாபம் அளவுகள் ரூ.16,011 கோடியிலிருந்து ரூ.15,138 கோடியாகக் குறைந்துள்ளது. இது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாக உள்ளது.

இதே ஜூன் காலகட்டத்தில் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் மொத்த வருவாய் வருடாந்திர அடிப்படையில் (YoY) 12% அதிகரித்து ரூ.2.36 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது சிறப்பான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இக்காலாண்டில் அதிகப்படியான செலவுகள் ஏற்பட்டு உள்ளதைக் காட்டுகிறது.
மேலும் 2024-25 ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தின், முதல் காலாண்டிற்கான ஒருங்கிணைந்த EBITDA அளவு வருடாந்திர அடிப்படையில் 2% அதிகரித்து ரூ.42,748 கோடியாக இருந்தாலும், EBITDA மார்ஜின் அளவு கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 150 அடிப்படை புள்ளிகள் குறைந்து 16.6% ஆக உள்ளது.
ஜூன் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருவாய் அதிகரிப்பிற்கான முக்கிய காரணம் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வும், அதன் மூலம் O2C பிரிவில் பதிவான வலுவான வளர்ச்சி தான். இதேவேளையில் எரிபொருள் மற்றும் எரிவாயு பிரிவில் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
ஜூன் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டிஜிட்டல் சேவைகள் துறையில் அதிகரித்த நெட்வொர்க் பயன்பாடு, ரீடைல் கடை எண்ணிக்கையில் பதிவான உயர்வு, உற்பத்தியில் அதிகரிப்பு ஆகியவை காரணமாக செலவுகள் அதிகரித்தது, மேலும் அனைத்து வணிக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
இதோடு ரிலையன்ஸ் வாங்கிய கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகரித்த காரணமாக நிதிச் செலவுகள் 1% அதிகரித்துள்ளது, இது தான் லாபத்தில் ஏற்பட்ட சரிவுக்கு முக்கிய காரணங்களாகும்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருவாய் சிறப்பாக இருந்தாலும், லாபம் குறைந்துள்ளது பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்குக் கவலை அளிக்கிறது. எதிர்காலத்தில் லாபத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை நிறுவனம் கண்டறிய வேண்டியது அவசியம்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications