பட்ஜெட் வருது.. ரிலையன்ஸ் பங்குகள் உயருது.. இது முக்கியமான விஷயமாச்சே..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சமீப காலமாகச் சிறப்பான வளர்ச்சியைக் கண்டு வருவதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் திங்களன்று ரிலையன்ஸ் பங்குகள் 2,883 ரூபாய் விலையில் முடிவடைந்த பின்னர், கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

இதன் எதிரொலியாக இன்று வியாழக்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் பங்குகள் 3027.50 ரூபாய் என்ற விலையில் திறந்து, புதிய வரலாற்று உச்ச விலையான 3,075 ரூபாயை அடைந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

பட்ஜெட் வருது.. ரிலையன்ஸ் பங்குகள் உயருது.. இது முக்கியமான விஷயமாச்சே..!

பங்குச்சந்தை நிபுணர்களின் கூற்றுப்படி, ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளிலும் வருவாய் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பே இந்த பங்கு விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

வலுவான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோ கெமிக்கல், டெக்ஸ்டைல் மற்றும் டெலிகாம் துறைகளில் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் பங்கு விலை நிலையான முறையில் 3,080 ரூபாயை கடந்து சென்ற நிலையில், விரைவில் 3,170 ரூபாயை தொட வாய்ப்புள்ளது எனவும் சந்தை முதலீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் பசவ் கேப்பிடல் நிறுவனர் சந்தீப் பாண்டே, ரிலையன்ஸ் பங்கு விலை உயர்வு குறித்து பேசுகையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் அனைத்து பிரிவுகளிலும் வருவாய் அதிகரிப்பு இருக்கும் என சந்தை எதிர்பார்க்கிறது. இந்தியாவில் வலுவான பொருளாதார வளர்ச்சியும், பருவ மழை குறித்த கணிப்புகள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்பட நாட்டின் அனைத்து முன்னணி இந்திய நிறுவனங்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளது.

டெக்ஸ்டைல், பெட்ரோ கெமிக்கல், தொலைத்தொடர்பு மற்றும் ரீடைல் துறைகள் அனைத்தும் வரும் காலாண்டுகளில் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2024ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டிற்குப் பிறகு பங்குகளில் புதிய உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் நம்பப்படுவதாக சந்தீப் பாண்டே கூறினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+