டெலிகாம் சேவை துறையில் இந்தியா பெரும் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், தற்போது ஆப்பிரிக்கக் கண்டத்தில் 5G தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் வர்த்தகத்தையும் வருமானத்தையும் ஈட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) களமிறங்குகிறது.
ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் (JPL) மற்றும் டெக் மஹிந்திரா, ஃபின்லாந்தின் நோக்கியா ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, ஆப்பிரிக்கக் கண்டத்தில் 5G ஷேர்டு நெட்வொர்க் கட்டமைப்பு தீர்வுகளை வழங்க உள்ளது.

ஏற்கனவே ஏர்டெல் ஆப்பிரிக்காவில் டெலிகாம் சேவை அளித்து வரும் வேளையில் இதே பார்முலா-வை பயன்படுத்தி ஜியோ தனது 5ஜி சேவை மற்றும் கட்டமைப்பை வெளிநாட்டு சந்தையில் ரிலையன்ஸ் களமிறங்க உள்ளது.
இந்த முயற்சியில், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படவுள்ள நிறுவனம் நெக்ஸ்ட்-ஜென் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கோ நிறுவனம் (NGIC) ஆகும். இந்த நிறுவனத்தில் கானா அரசு, அசெண்ட் டிஜிட்டல் மற்றும் கே-நெட் ஆகியவை முதலீடு செய்து பங்குகளை வைத்துள்ளது.
ஆப்பிரிக்காவில் முதன் முதலாக நியூட்ரல் 5G வலை அமைப்பை வழங்கியது NGIC தான். இந்த கூட்டணியில் அறிமுகம் செய்யப்படும் 5ஜி சேவை முதலில் கானாவிலும் பின்னர் முழு ஆபிரிக்காவிலும் வழங்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த வர்த்தக ஒப்பந்தம் கீழ், NGIC தனது 4G மற்றும் 5G நெட்வொர்க் வசதிகளை மேம்படுத்துவதற்காக மூன்று ஆண்டுகளில் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்த நெட்வொர்க் வசதிகள் ஆப்பிரிக்காவில் உள்ள மொபைல் ஆப்ரேட்டர்களுக்கு பகிரப்பட்ட கட்டமைப்பு வளமாக வழங்கப்படும். இதன் மூலம், செலவுமிக்க 5G சேவைகளை வழங்க விரும்பும் ஆப்பிரிக்கத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அதிக செலவில் தனியாக நெட்வொர்க் அமைப்பதற்கான தேவை இல்லை, ஒரே நெட்வொர்க்கில் அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இந்தத் திட்டத்தில், ஜியோ பிளாட்பாமர்ஸ் லிமிடெட் முதலீட்டில் இயங்கும் ரேடிசிஸ் நிறுவனம், NGICக்கு அதன் சொந்த 5G மென்பொருள் தொகுப்பை (5G software stack) வழங்கக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிலையன்ஸ் மூலம் 5ஜி தொழில்நுட்பம் ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் உருவாக்கியுள்ள 5G மென்பொருள் தொகுப்பு, ஓபன்-ரான் (Open-RAN - ரேடியோ ஆக்சஸ் நெட்வொர்க்) தொழில்நுட்பத்தையும், கருவிகளையும் பயன்படுத்தி, கானாவில் தொடங்கிப் பிற ஆப்பிரிக்கச் சந்தைகளிலும் 5G அடிப்படையிலான பிக்சட் வயர்லெஸ் ஆக்சஸ் (FWA) சேவைகளை வழங்க உள்ளது.
இந்த முயற்சி மூலம், இந்திய தொழில்நுட்பம் ஆப்பிரிக்கக் கண்டத்தின் தகவல் தொடர்பு துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications