சென்னை: இந்திய மீடியா துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், மும்பை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு சொந்தமான வயாகாம்18-ன் துணை நிறுவனமான டிஜிட்டல்18 மற்றும் வால்ட் டிஸ்னியின் ஸ்டார் இந்தியா இடையேயான இணைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது வயாகாம்18 மற்றும் ஸ்டார் இந்தியா-வின் மெகா இணைப்பு திட்டத்தின் முதல் படியாகும். வயாகாம்18 மற்றும் ஸ்டார் இந்தியா மத்தியில் பல மாத பேச்சு வார்த்தைக்குப் பின்பு இறுதி முடிவு எடுக்கப்பட்டாலும், அரசு தரப்பில் இருந்து வர்த்தக சந்தையைப் பாதிக்காத வகையில் இந்த இணைப்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்து NCLT அமைப்பு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.

நீதிபதி கிஷோர் வேமுலாபல்லி மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் அனு ஜக்மோகன் சிங் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், மே 7 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், நிறுவனங்கள் தங்களின் பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பற்ற கடன்தாரர்களைக் கூட்டி, இணைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும் மே 15 தேதியிட்ட ஒரு தனி உத்தரவில், NCLT மும்பை பெஞ்ச் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் உரிமையாளரான நோவி டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட்டை அதன் தாய் நிறுவனமான ஸ்டார் இந்தியாவுடன் இணைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், மும்பை மண்டல இயக்குனர் (மேற்கு பிராந்தியம்) அலுவலகம், கம்பெனி பதிவாளர், வருமான வரித்துறை, Goods and Services Tax (GST) அதிகாரிகள், இந்திய போட்டி ஆணையம் (CCI), கார்ப்பரேட் விவகாரங்கள் துறை மற்றும் பிற துறை மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு இணைப்பு திட்டத்தின் நகலுடன் அறிவிப்புகளை வழங்க வயாகாம்18 மற்றும் டிஸ்னி இந்தியா நிறுவனங்களுக்கு NCLT உத்தரவிட்டுள்ளது.
இந்த அலுவலக அதிகாரிகள் 30 நாட்களுக்குள் அறிவிப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்றால், அவர்களுக்கு இந்த திட்டத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கருதப்படும் என்றும் NCLT குறிப்பிட்டுள்ளது.
இணைப்பு திட்டத்தின் அமைப்பு: இந்த இணைப்பு திட்டம் இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது. முதல் கட்டத்தில், வயாகாம்18 இன் டிவி மற்றும் ஸ்ட்ரீமிங் சொத்துக்களை டிஜிட்டல்18 க்கு மாற்றுவது. இரண்டாம் கட்டத்தில், டிஜிட்டல்18 இல் இருந்து ஸ்டார் இந்தியாவுக்கு இந்த சொத்துக்களை பிரித்தெடுத்து ஒப்படைப்பது.
இந்த திட்டத்தின் கீழ், வயாகாம்18 ஸ்ட்ரீமிங் தளமான ஜியோசினிமா-வை டிஜிட்டல்18 க்கு மாற்றும். இதற்காக, டிஜிட்டல்18, ரூ.10 மதிப்புள்ள 24.18 பில்லியன் பங்குகளை ஒதுக்கீடு செய்ய உள்ளது, இதன் மூலம் நிறுவனத்திற்கு ரூ.24,186 கோடி தொகையாக வழங்குகிறது.
இதன் பின்பு வயாகாம்18 அதன் மீடியா ஆப்ரேஷன்ஸ்-ஐ டிஜிட்டல்18 க்கு மாற்றும், இதற்காக ரூ.10 முக மதிப்புள்ள 2.76 பில்லியன் பங்குகளை ஒதுக்கீடு செய்ய உள்ளது, இதன் மூலம் ரூ.2,769 கோடி மதிப்பிலான தொகை பரிமாறப்படுகிறது. .
இதன் பின்னர், டிஜிட்டல்18 நிறுவனம் வயாகாம்18 சொத்துக்களை ஸ்டார் இந்தியாவுக்கு மாற்றும். இதற்கான பங்குகளும் பரிமாற்றம் செய்யப்படும் போது, ஸ்டார் இந்தியா நிறுவனம் ரிலையன்ஸ்-க்கு சுமார் 1.4 பில்லியன் டாலர் முதலீட்டை செய்ய உள்ளது.
முழு இணைப்பிற்கு பின்பு ஸ்டார் இந்தியாவின் பங்கு இருப்பு 3 தரப்பினருக்கு பிரிக்கப்பட்ட உள்ளது. இதில் வால்ட் டிஸ்னி 36.63 சதவீத பங்குகளையும், டிஜிட்டல் 18 நிறுவனம் 46.11 சதவீத பங்குகளையும், ரிலையன்ஸ் 16.34 சதவீத பங்குகளையும் பெறும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications