அமெரிக்காவின் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு விமானம் வெள்ளிக்கிழமை 174 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த வேளையிலேயே அதன் கதவு திடீரென உடைந்து நடுவானில் இருக்கும்போதே வெளியே பறந்துள்ளது, இதனுடன் அடுத்த சில நொடியில் ஒரு இருக்கையும் உடைந்து வெளியே பறந்து.
இதைத்தொடர்ந்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த பணிகளும், 6 பணியாளர்களும், அமெரிக்காவின் போர்ட்லேண்ட் விமான நிலையத்தில் அவசரமாக விமானத் தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட போயிங் 737-9 Max ரகமாகும்.

இதே போயிங் 737-9 Max ரக விமானத்தைத் தான் முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பயன்படுத்தி வருகிறது என ஈடி பத்திரிக்கை தெரிவித்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி மட்டுமே இந்தியாவில் போயிங் 737-9 Max ரக விமானத்தைக் கார்பரேட் ஜெட் ஆகப் பயன்படுத்தி வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு.
முகேஷ் அம்பானி-யின் போயிங் 737-9 Max ரக விமான T7-LOTUS என்ற பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு உள்ளது, இந்த விமானம் ரிலையன்ஸ் லோகோ உடன் பெயின்டிங் செய்யப்பட்டது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தங்களுடைய போயிங் விமானத்தைக் குறித்து இதுவரையில் எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.
கடந்த ஆண்டுத் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது கார்ப்ரேட் போக்குவரத்தில் போயிங் 737-9 Max விமானத்தைச் சேர்த்தது. ரிலையன்ஸ் நிறுவனத்திடம் Embraer SA ERJ 145 மற்றும் Airbus SE A319 ஆகிய இரு விமானங்களும், Dauphin மற்றும் Sikorsky ரக ஹெலிகாப்படர்களும் உள்ளது.

போயிங் 737-9 Max ரக விமானத்தை அதிகளவில் வைத்துள்ள நிறுவனங்களில் அலாஸ்கா ஏர், யுனைடெட் ஏர்லையன்ஸ் ஹோல்டிங்க்ஸ், பனாமா கோபா ஏர்லைன்ஸ், ஃப்ளைதுபாய், ஏரோமெக்சிகோ, ஏர் டான்சானியா ஆகியவை வைத்துள்ளது.
இதேபோல் இந்தியாவில் போயிங் 737-9 Max மற்றும் போயிங் 737-8 Max ரக விமானங்களை வைத்திருக்கும் இந்திய நிறுவனங்களை உடனடியாகச் செக் செய்துவிட்டு அறிக்கை கொடுக்கும் படி அலாஸ்கா சம்பவத்திற்குப் பின்பு இந்திய சிவில் ஏவியேஷன் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பின்பு அமெரிக்காவில் 600 விமானங்களின் பயணம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 4 போயிங் 737-9 Max விமானங்களை வைத்துள்ளது, இதேபோல் ஸ்பைஸ்ஜெட் 8 விமானங்களையும், அகாசா 20 விமானங்களையும் வைத்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications