மும்பை: இந்திய டெலிகாம் துறையின் முன்னணி நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம், சமீபத்தில் தனது சேவைகளின் கட்டணங்களை உயர்த்தி சாமானிய மக்களை கதறவிட்டது. பல வருடங்களுக்குப் பின்பு கட்டணத்தை முதல் முறையாக உயர்த்தியது ஜியோ தான் இதன் பின்பு ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவை உயர்த்தியது.
ஜியோ இந்த கட்டணத்தை உயர்த்தியது மூலம் 5ஜி சேவையை இனியும் ப்ரோமோஷனல் சேவையாக இல்லாமல் லாபகரமாக்குவதிலும் தீவிரமாக முனைப்புக் காட்டுவது, 5ஜி சேவைக்காக செய்யப்பட்ட முதலீடுகளைத் திரும்ப எடுக்கும் முயற்சியில் முகேஷ் அம்பானி - ஆகாஷ் அம்பானி இறங்கியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

இந்த நடவடிக்கைகளைப் பார்க்கும் போது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் ரிலையன்ஸ் ஜியோ தனியாகப் பிரிக்கப்பட்டு IPO வெளியிடத் தயாராகி வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சில பங்குச்சந்தை ஆய்வாளர்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்த ஐபிஓ நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கின்றனர்.
முகேஷ் அம்பானிக்கு ஏற்கனவே டிமெர்ஜிங் மற்றும் லிஸ்டிங்-ல் பெரிய அனுபவம் இருக்கும் வேளையில், ஜியோ தனியாகப் பிரித்து ஐபிஓ வெளியிடப்பட்டால் மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பை உருவாக்குவதாக இருக்கும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் (RIL) அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் ஜியோவின் பிரம்மாண்ட ஐபிஓ குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகும் என தொழில் துறை நிபுணர்களும், சந்தை ஆய்வாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.
ஜியோவின் சமீபத்திய கட்டண உயர்வு மற்றும் 5ஜி சேவையை லாபகரமாக்கும் முயற்சிகள் மூலம், வரும் காலாண்டுகளில் ஜியோவின் சராசரி வருவாய் (ARPU) அதிகரிக்கும், இந்த ஒரு விஷயம் ஐபிஓவுக்கு முன்னதாக முதலீட்டாளர்களைக் கவர போதுமானதாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
ஜெஃப்ரீஸ் நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, சமீபத்திய கட்டண உயர்வு மற்றும் 5ஜி சேவையை லாபகரமாக மாற்றும் முயற்சிகளுக்குப் பின்னர், ஜியோ சுமார் 133 பில்லியன் டாலர் அதாவது 11.11 லட்சம் கோடி ரூபாய்க்கு மதிப்புடையதாக உயர்ந்துள்ளது.
இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், ஜியோவின் ஐபிஓ நிச்சயமாக இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-வாக இருக்க வாய்ப்புகள் அதிகம். தற்போதைய செபி விதிகளின்படி, 1 லட்சம் கோடி ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள நிறுவனங்கள் ஐபிஓ-வில் குறைந்தபட்சம் 5% பங்குகளை விற்பனை செய்ய வேண்டும் (சிறிய நிறுவனங்களுக்குக் குறைந்தபட்சம் 10%).
ஜெஃப்ரீஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட தற்போதைய மதிப்பீட்டின் அடிப்படையில், ஜியோவின் ஐபிஓ பங்கு விற்பனை சுமார் 55,500 கோடி ரூபாயாக இருக்கும்.
இதுவரை இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ஐபிஓ, 2022ஆம் ஆண்டில் 3.5% பங்குகளை விற்பனை செய்து லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் 21,000 கோடி ரூபாய் மதிப்புடைய ஐபிஓ வெளியிட்டது தான். இதற்கிடையில், ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் இந்திய பிரிவு, கடந்த மாதம் 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஓ வெளியிட திட்டமிட்டு உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications