முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்.. இனி பணம் விளையாடும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீல் தனது வர்த்தகத்தை மேம்படுத்தவும், விரிவாக்கவும், புதிய வர்த்தகங்களை ஈர்க்கவும், அதானி குழுமத்தை முந்தவும் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் 2 நிறுவனங்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

இதனால் முதலீட்டாளர்கள் புதிய நிறுவனத்தின் பங்குகளைப் பெற உள்ளனர், அனைத்திற்கும் மேலாக ரிலையன்ஸ் இப்புதிய நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட முடிவு செய்துள்ளது.

முகேஷ் அம்பானி புதிய திட்டத்துடன் வேகமாக முன்னேறி வருகிறார், இது அதானி, டாடா, ஆதித்யா பிர்லா உட்பட அனைத்து நிறுவனங்களுக்கும் கடுமையான போட்டியை உருவாக்க உள்ளது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இரு முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது, அதாவது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் இருக்கும் முக்கியக் கிளை நிறுவனமான Reliance Strategic Investments (RSIL) நிறுவனத்தை Jio Financial Services Limited (JFSL) எனப் பெயர் மாற்றித் தனியொரு நிறுவனமாகப் பிரிந்து ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் இருந்து வெளியேறத் திட்டமிட்டு உள்ளது.

ஐபிஓ வெளியீடு

ஐபிஓ வெளியீடு

Jio Financial Services Limited (JFSL) நிறுவனத்தை ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டு இருக்கும் நிலையில் இது ஆர்பிஐ வங்கியிடம் டெப்பாசிட் பெற முடியாத NBFC வங்கி உரிமத்தை வைத்துள்ளது. மார்ச் 31, 2022 வரையிலான காலகட்டத்தில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பிரிவின் விற்றுமுதல் 1,387 கோடி ரூபாயாக உள்ளது.

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ்

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ்

ரிலையன்ஸ் குழுமத்தில் இருந்து ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் தனியாகப் பிரிக்கப்பட்ட பின்பு, ரிலையன்ஸ் முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் வைத்திருக்கும் முழுமையாகச் செலுத்தப்பட்ட ரூ.10 ஈக்விட்டி பங்கிற்கு ஒரு 10 ரூபாய் முக மதிப்புக் கொண்ட ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அளிக்கப்படும்.

கடன் வழங்கும் திட்டம்

கடன் வழங்கும் திட்டம்

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தனியாகப் பிரிக்கப்பட்ட பின்பு தனது வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு நேரடியாகக் கடன் வழங்க உள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் குழுமம் நிதியியல் சேவையில் இறங்குவது மட்டும் அல்லாமல் ரீடைல் விற்பனையாளர்களுக்குக் கடன் கொடுத்து தனது பிற வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய உள்ளது.

ரீடைல் மற்றும் சிறு வர்த்தகர்கள் டார்கெட்

ரீடைல் மற்றும் சிறு வர்த்தகர்கள் டார்கெட்

ரிலையன்ஸ் குழுமத்தில் தற்போது போதுமான வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தரவுகள் உள்ளது. இதேபோல் எந்த விற்பனையாளர்கள் எவ்வளவு வர்த்தகம் செய்கிறார் என்ற விபரமும் உள்ளது. இது இரண்டையும் இணைக்கும் தொழில்நுட்ப உதவிகளும் இருக்கும் காரணத்தால் ரீடைல் மற்றும் சிறு வர்த்தகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தையும் ஆதிக்கத்தையும் முகேஷ் அம்பானி ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தால் செய்ய முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani plans to demerge and list Reliance Strategic Investments; launch consumer and merchant loan business

Mukesh Ambani plans to demerge and list Reliance Strategic Investments; launch consumer and merchant loan business
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X