ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும், ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும் உள்ள முகேஷ் அம்பானி, தனது சொத்துக்களில் இன்னொரு விலை உயர்ந்த விஷயத்தை சேர்த்துள்ளார். இந்தியாவின் முதல் போயிங் 737 MAX 9-ஐ என்ற ஜெட் விமானத்தை வாங்கியுள்ளார், இது இந்தியாவின் தொழிலதிபர்கள் வைத்திருக்கும் மிகவும் விலையுயர்ந்த தனியார் ஜெட் விமானமாகும். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 987 கோடி என்று கூறப்படுகிறது.
ஃபோர்ப்ஸ் மதிப்பீட்டின்படி 9.2 லட்சம் கோடி நிகர மதிப்புடன் உள்ளார் முகேஷ் அம்பானி. அதிக விலை கொடுத்து வாங்கும் பொருட்களுக்கு முகேஷ் அம்பானி புதியவர் கிடையாது. அதன்படி அவர் சமீபத்தில் போயிங் 737 மேக்ஸ் 9 என்ற ஜெட் விமானத்தை வாங்கியுள்ளார். இந்த ஜெட் விமானத்தின் விலை $118.5 மில்லியன் ஆகும். இந்திய மதிப்புக்கு சுமார் ரூ. 987 கோடி. டைம்ஸ் நவ் அறிக்கையின்படி, இதற்கான ஒட்டுமொத்த செலவு ரூ. 1,000 கோடியைத் தாண்டியதாகக் கூறப்படுகிறது.

போயிங் 737 மேக்ஸ் 9-இன் அம்சங்கள்: போயிங் 737 மேக்ஸ் 9, அதன் சிறந்த அம்சத்திற்காகவும் வசதிக்காகவும் அறியப்படுகிறது. அதன் முன்னோடியான போயிங் மேக்ஸ் 8-ஐ விட விசாலமான கேபினைக் கொண்டுள்ளது. இரண்டு CFMI LEAP-1B இன்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த ஜெட், ஒரே பயணத்தில் 6,355 கடல் மைல் (11,770 கி.மீ) தூரத்தை கடக்கும் என்றும் கூறப்படுகிறது. அதன் வேகம், ஆடம்பரம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றின் காரணமாக உலகளவில் சிறந்த தனியார் ஜெட் விமானங்களில் ஒன்றாக உள்ளது.
தற்போது முகேஷ் அம்பானி வாங்கி இருக்கும் இந்த ஜெட் விமானம் அவர் ஏற்கனவே வைத்திருக்கும் விமானங்களில் ஒன்றாக சேர்ந்துள்ளது. முகேஷ் அம்பானி ஏற்கனவே ஒரு பாம்பார்டியர் குளோபல் 6000, இரண்டு டாசால்ட் ஃபால்கன் 900-கள் மற்றும் ஒரு எம்பிரேர் ERJ-135 உட்பட 9 ஜெட்களை வைத்திருக்கிறார். முகேஷ் அம்பானியின் ஜெட் விமானங்கள் மீதான ஆர்வம் ஏற்கனவே பலராலும் நன்கு அறியப்பட்டது தான். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு உயர்தர ஜெட் விமானத்தை வாங்கியுள்ளார்.
இந்தியா வருவதற்கு முன், முகேஷ் அம்பானியின் போயிங் 737 MAX 9, சுவிட்சர்லாந்தில் உள்ள யூரோ ஏர்போர்ட் பாசல்-மல்ஹவுஸ்-ஃப்ரீபர்க்கில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. விமானத்தின் உட்புறம் முகேஷ் அம்பானியின் விவரக்குறிப்புகளுக்கு ஏற்ப சில மாறுதல்கள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, இந்த ஜெட் விமானம் டெல்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைமையகமான மும்பையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போயிங் 737 மேக்ஸ் 9 விமானம் பாதுகாப்பு அம்சங்கள், சவுகரியம், பிற விமானங்களுடன் ஒப்பிட முடியாத செயல்திறன் ஆகியவற்றிற்காக அறியப்படுகிறது. இந்த விமானம் நல்ல பயண அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக அமைகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications