பொம்பை வர்த்தகத்தில் சுமார் 261 வருடம் இயங்கி வரும் பிரிட்டன் நாட்டின் Hamleys நிறுவனம் பல வருடங்களாகப் போதிய வர்த்தகம் இல்லாமலும், லாபம் பெற முடியாமலும் தவித்து வருகிறது.
இந்நிலையில் இந்நிறுவனத்தின் வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியாக 2019ல் ஆண்டில் இந்தியப் பணக்காரர் முகேஷ் அம்பானி-க்கு விற்பனை செய்யப்பட்டது.
முகேஷ் அம்பானி கையில் Hamleys
முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டிற்குள் வந்த Hamleys நிறுவனம் கடந்த 3 வருடத்தில் கொரோனா பாதிப்புகள், லாக்டவுன் அறிவிப்புகளையும் தாண்டி சுமார் 500 விற்பனை கடைகளைப் பிரிட்டன் மண்ணில் மட்டும் திறந்துள்ளது. பிரிட்டன் மட்டும் அல்லாமல் ஐரோப்பா, தென் ஆப்பிரிக்கா, சீனா, இந்தியா எனப் பல நாடுகளில் வர்த்தகம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
அம்பானி உடனான கூட்டணி
இந்திய பணக்காரர் மற்றும் இந்தியா போன்ற மிகப்பெரிய வர்த்தகச் சந்தை Hamleys நிறுவனத்திற்குப் பெரிய அளவிலான வர்த்தக வாய்ப்பையும், சரிவில் இருந்து மீண்டு வர ஒரு முக்கிய வாய்ப்பாகவும் அம்பானி உடனான கூட்டணி இருக்கும் என நம்புகிறது.
Hamleys பங்கீடு
கடந்த வருடம் சர்வதேச பொம்மைகள் விற்பனை சந்தையில் Hamleys நிறுவனத்தின் மொத்த பங்கீடு வெறும் 0.6 சதவீதம் மட்டுமே என்று யூரோமானிட்டர் இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. இப்படியிருக்கும் போது இந்தியா ஏன் Hamleys-க்கு முக்கிய வர்த்தக வாய்ப்பாக இருக்கும்.
90 பில்லியன் டாலர் சந்தை
இந்தியாவில் இருக்கும் சுமார் 1.4 பில்லியன் டாலர் மக்கள் தொகையில் 27 சதவீதம் பேர் 14 வயதிற்குக் குறைவானவர்கள், ஆனால் மொத்த சர்வதேச பொம்மை வர்த்தகச் சந்தையான 90 பில்லியன் டாலர் மதிப்பில் இந்தியா வெறும் 1 சதவீத வர்த்தகத்தை மட்டுமே Hamleys வைத்துள்ளது. இதனால் இந்தியாவில் வளர்ச்சி அடைய அதிகளவிலான வாய்ப்புகள் இருப்பதாக ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சிஇஓ தர்ஷன் மேத்தா தெரிவித்துள்ளார்.
Hamleys காஸ்ட்லி
ஆனால் இந்திய சந்தையில் தற்போது Hamleys-க்கு இருக்கும் முக்கியப் பிரச்சனை இதுதான். சந்தையில் இருக்கும் பல பிராண்டுகளை விடவும் Hamleys-வின் தயாரிப்புகள் மற்றும் பொம்மைகள் மிகவும் ஆடம்பரமாகவும், காஸ்ட்லியாகவும் இருக்கிறது என்பது ஆசிய சந்தையில் மக்களின் கண்ணோட்டம்.
ஆன்லைன் வர்த்தகம்
இந்தியாவில் Hamleys நிறுவனம் ஆன்லைன் மூலம் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது. இதன் அடுத்த 5 வருடத்தில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications