முகேஷ் அம்பானி-க்கு திங்கள்கிழமை 3வது முறையாக கொலை மிரட்டல் விடுத்து ரூ.400 கோடி பணம் கேட்டு ஈமெயில் மூலம் மிரட்டி எச்சரித்துள்ளார் ஒரு மர்ம நபர். ஒரே வாரத்தில் 3 முறை முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது, 3 ஈமெயிலும் ஒரே ஐடியில் வந்துள்ளது மட்டும் அல்லாமல் இது பெல்ஜியம் நாட்டில் இருந்து வந்துள்ளது டிராக் செய்யப்பட்டு உள்ளது.
கொலை மிரட்டல் ஈமெயிலில் அந்த மர்ம நபர் உங்கள் பாதுகாப்பு எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், எங்களின் ஒரு ஸ்னைப்பர் வீரர் போதும் உங்களைக் கொல்ல முடியும் என்று மிரட்டியுள்ளார். இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு படை எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

மத்திய அரசு நாட்டின் பொருளாதாரம், அரசுக்கு முக்கியமானவர்கள், அச்சுறுத்தல் எதிர்கொள்ளும் முக்கிய நபர்களுக்கு உயர்தர பாதுகாப்பு வழங்குகிறது. இதில் X, Y, Y+, Z, Z+ என பல வகை பாதுகாப்பு உள்ளது, இந்த சிறப்பு பாதுகாப்பை பொதுவாக CRPF அமைப்பு தான் வழங்கும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு 2013 ஆம் ஆண்டு முதல் Z பாதுகாப்பு அளிக்கப்பட்டு வரும் வேளையில், கடந்த ஆண்டு மத்திய அரசு சார்பில் மத்திய புலனாய்வு அமைப்பின் கொடுத்த ஆபத்துக் காரணிகள் அடிப்படையில் Z plus என்ற உயர் தர பாதுகாப்பை அளிக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
இதைத் தொடர்ந்து முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானிக்கு Y+ பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. மேலும் இந்தப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான சம்பளத்தை முகேஷ் அம்பானி தரப்பில் இருந்து மத்திய அரசுக்குச் செலுத்தப்படும்.
தற்போது முகேஷ் அம்பானிக்கு அளிக்கப்படும் Z Plus பாதுகாப்பில் 10 கமாண்டோ அதிகாரிகள் உடன் 40 - 50 காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். இதுவே Z பிரிவு பாதுகாப்பில் 3 முதல் 4 CRPF கமாண்டோக்கள் மற்றும் சுமார் 30 காவல் துறை அதிகாரிகள் என 33 முதல் 35 பாதுகாப்பு அதிகாரிகள் இருப்பார்கள்.
Z பிரிவு VIP பாதுகாப்பு சேவைக்குக் ஒரு மாதத்திற்குச் சுமார் ரூ.15-20 லட்சம் வரையில் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும், Z Plus பாதுகாப்பிற்கு 30 லட்சம் வரையில் செலவாகும் என கணிக்கப்படுகிறது. இதுக்குறித்து முழுமையான விபரம் வெளியிடப்படவில்லை, காவல் அதிகாரிகளின் அனுபவம் பொறுத்து சம்பளம் வேறுப்படும் காரணத்தால் ஓவ்வொரு மாதமும் இத்தொகை மாறுப்படும்.
Z Plus பாதுகாப்பில் முகேஷ் அம்பானி-க்கு மட்டும் அல்லாமல் அவரது வீட்டுக்கும், அலுவலகத்திற்கும் துப்பாக்கி ஏந்திய அதிகாரிகள் பாதுகாப்பு அளிக்கப்படும். மேலும் முகேஷ் அம்பானி பயணத்தின் போது ஆயுதம் ஏந்திய அதிகாரிகள் அவருடைய வாகனத்திற்குப் பாதுகாப்பு அளிக்கப்படும்.
இந்த Z பாதுகாப்பை பொதுவாக CRPF அமைப்பு தான் வழங்கும், தற்போது CRPF அமைப்பில் இந்தியாவில் சுமார் 119 பேருக்கு உயர் தர பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் 18 பேருக்கு Z plus பாதுகாப்பு, 27 பேருக்கு Z பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இந்த அனைத்து பாதுகாப்பும் மத்திய புலனாய்வு அமைப்பின் முடிவுகள் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications