இந்தியாவின் பெரும் பணக்காரர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி-க்கு திங்கள்கிழமை கொலை மிரட்டல் விடுத்து ரூ.400 கோடி பணம் கேட்டு மிரட்டி எச்சரிக்கப்பட்டு உள்ளார். இது கடந்த ஒரு வாரத்திற்குள் முகேஷ் அம்பானிக்கு வந்த மூன்றாவது கொலை மிரட்டல்.
நவம்பர் 1 ஆம் தேதி மும்பையில் ஜியோ வோல்டு பிளாசா என்னும் இந்தியாவின் ஆடம்பர ஷாப்பிங் மால் திறக்கப்பட உள்ள நிலையில், இதை திறக்க முகேஷ் அம்பானியும் அவரது குடும்பமும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் வேளையில் ஒரு வாரத்தில் 3 கொலை மிரட்டல் வந்துள்ளது.

முகேஷ் அம்பானிக்கும், அவரது குடும்பத்திற்கும் மத்திய அரசு நாட்டிலேயே அளிக்கப்படும் அதிகப்படியான பாதுகாப்பு அளிக்கப்படும் வேளையிலும் இந்த கொலை மிரட்டல் அம்பானி குடும்பத்திற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு 2 கொலை மிரட்டல் எச்சரிக்கையை விடுத்தவர் தான் 3வது முறையும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 3 மிரட்டல்களும் ஒரே இமெயில் ஐடியில் இருந்து வந்துள்ளதாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளதாக நியூஸ்18 வெளியிட்டு உள்ளது.
3வது முறை அனுப்பப்பட்ட கொலை மிரட்டல் ஈமெயிலில் பணம் தொகை அதிகரித்துள்ளாதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த இமெயில் ஐடி பெல்ஜியம் நாட்டுக்கு டிரேஸ் செய்யப்பட்டு உள்ளது, கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எச்சரிக்கை இமெயில் தொடர்ந்து முகேஷ் அம்பானி-யின் மும்பை ஆண்டிலியா வீட்டை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானிக்கு வந்த மின்னஞ்சலில், இப்போது அந்தத் தொகை 400 கோடி, என்னைக் டிராக் செய்யவும், கைது செய்யவும் காவல்துறையால் முடியாது. உங்கள் பாதுகாப்பு எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், எங்களின் ஒரு ஸ்னைப்பர் வீரர்களில் ஒருவர் போதும் உங்களைக் கொல்ல முடியும் என்று மிரட்டியுள்ளார்.
இதற்கு முன்பு, முகேஷ் அம்பானி-க்கு ரூ.20 கோடி கேட்டு கொலை மிரட்டல் எச்சரிக்கை வந்தது, இந்த ஈமெயில் அக்டோபர் 27 வெள்ளிக்கிழமை இரவு 8:51 மணிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து மும்பையின் காம்தேவி காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 387 மற்றும் 506 (2) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அக்டோபர் 28 ஆம் தேதி 2வது ஈமெயில் அதே கொலை மிரட்டல் உடன் 200 கோடி ரூபாய் கேட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று 3வதாக ஈமெயில் வந்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications