வாழ்ந்தால் பணக்காரர்களாகத் தான் வாழ வேண்டும். இல்லை என்றால் அது எல்லாம் என்ன வாழ்கை என நம்மில் பலரும் சொல்லி இருப்போம்.
Recommended Video
அப்படிப்பட்ட பணக்காரர்களே, இந்த கொரோனா வைரஸால் பயங்கரமாக சொத்து மதிப்புகளை இழந்து இருக்கிறார்களாம்.
ஆனால் இழந்ததை அடுத்த இரண்டு மாதங்களிலேயே சர சரவென சம்பாதித்தும் இருக்கிறார்கள். அதாவது அவர்கள் சொத்து மதிப்பு மீண்டும் அதிகரித்துவிட்டது என்கிறது ஹூரன் வெளியிட்ட சிறப்பு அறிக்கை சொல்கிறது.
டாப் 100 பேர்
சீனாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது ஹூரன் கம்பெனி. இந்த கம்பெனி, ஒவ்வொரு ஆண்டும், உலகின் டாப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும். இப்போது ஒரு சிறப்பு அறிக்கையாக, கொரோனா வந்த பின் 4 மாதங்களில், உலகின் டாப் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பில், கொரோனா என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என ஒரு அறிக்கையைத் தயார் செய்து இருக்கிறது.
முகேஷ் அம்பானி
உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும், ந, இந்தியாவின் முகேஷ் அம்பானி, கொரோனா வைரஸ் பிரச்சனை வந்த முதல் 2 மாதத்தில், அவரின் சொத்து மதிப்பில் சுமாராக 19 பில்லியன் டாலரை இழந்தாராம். ஆனால் அடுத்த இரண்டு மாதத்தில் 18 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு மீண்டும் கூடிவிட்டதாம்.
நிமிடத்துக்கு 1.58 கோடி ரூபாய்
ஆக, முகேஷ் அம்பானி, கடந்த இரண்டு மாதத்தில், ஒரு நிமிடத்துக்கு 1.58 கோடி ரூபாய் சம்பாதித்து இருக்கிறார். ஒரு நிமிடத்துக்கு 1.5 கோடியா..? நம் 10 வருட சம்பளத்தை ஒன்றாகச் சேர்த்தால் கூட இந்த தொகையை எட்ட முடியாது போலிருக்கிறதே..! சரி வருத்தப்பட்டு என்ன பயன். அடுத்த ஆளைப் பார்ப்போம்.
விட்டத பிடிச்சுட்டாங்க
இப்படியாக, உலகின் டாப் 100 பணக்காரர்கள், கொரோனா வைரஸ் பிரச்சனை வந்த பின், முதல் இரண்டு மாத காலத்தில் இழந்த சொத்து மதிப்பில், சுமாராக 98 சதவிகித சொத்து மதிப்புகளை, அடுத்த 2 மாத காலத்தில், மீண்டும் சம்பாதித்துவிட்டதாகச் சொல்கிறது ஹூரன் அறிக்கை.
பெரிய லாபம் இவருக்கு தான்
இந்த கொரோனா வைரஸ் பிரச்சனையை எல்லாம் ஒரு பொருட்டாகவே பார்க்காமல், சொத்து மதிப்பு அதிகரித்தவர்களில் ஒருவர், அமேசான் கம்பெனியின் நிறுவனர் ஜெஃப் பிசாஸ் தான். இந்த கொரோனா வைரஸ் காலத்திலும், மனிதர் 20 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைச் சம்பாதித்து இருக்கிறாராம். வாழ்கைன்னா இது தாங்க வாழ்கை.


Click it and Unblock the Notifications