ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு பொற்காலம் என கூறும் அளவுக்கு அடுத்தடுத்த நல்ல செய்தியாகவே வந்து கொண்டிருக்கிறது. ஜியோ ஐபிஓ வெளியிட்டு அம்பானி குடும்பமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது இந்நிலையில் ஒரே நாளில் அம்பானியின் சொத்து மதிப்பு 80,000 கோடி ரூபாய் சேர்ந்து இழந்த மகுடத்தை அவருக்கு திருப்பி தந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் பங்குச்சந்தையில் ஒரே நாளில் வேகமாக உயர்ந்தன. இதனால் ரிலையன்ஸ் பங்கு மதிப்பு உயர்ந்து, முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு அதிகரித்து முகேஷ் அம்பானி உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராகவும், ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராகவும் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். Forbes தரவுகளின்படி, பிரபல சமூக ஊடகமான 'டிக் டாக்' தாய் நிறுவனமான பைட்டடான்ஸின் இணை நிறுவனர் சாங் யிமிங்கை பின்னுக்கு தள்ளி அம்பானி இந்த சாதனையை படைத்துள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் சுமார் 12 சதவீதம் வரை உயர்ந்து ஒரு பங்கின் விலை 1164 ரூபாயில் இருந்து 1300 ரூபாய் என வர்த்தகமானது. இந்த திடீர் ஏற்றத்தின் மூலம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 80,000 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகரித்தது. இதன் விளைவாக, அவரது மொத்த சொத்து மதிப்பு 88.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது.
ஃபோர்ப்ஸின் நிகழ்நேர பணக்காரர்கள் பட்டியலின்படி, இந்த சொத்து மதிப்பு உயர்வின் மூலம் முகேஷ் அம்பானி உலகளாவிய பணக்காரர்கள் வரிசையில் 23ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்பு ஆசியாவின் முன்னணி பணக்காரராக இருந்த சீனாவின் பைட்டடான்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சாங் யிமிங், தற்போது 84 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக அளவில் 25ஆவது இடத்திற்கு இறங்கியுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெட்ரோகெமிக்கல்ஸ், எண்ணெய் மற்றும் எரிவாயு , தொலைத்தொடர்பு , சில்லறை வர்த்தகம் , ஊடகம் மற்றும் நிதி சேவைகள் என பல்வேறு துறைகளில் காலூன்றி இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக திகழ்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை ரிலையன்ஸின் காலாண்டு நிதி முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில் ரிலையன்ஸ் வரலாறு காணாத வருவாய் மற்றும் லாபத்தை பதிவு செய்திருந்தது. குறிப்பாக நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் சுமார் 50,000 கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் ஈட்டி இருந்தது. இதனால் திங்கள்கிழமை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் பங்குகளை வாங்க கடும் போட்டி காணப்பட்டது. இதுவே பங்கு மதிப்பு ஒரே நாளில் வேகமாக உயர காரணமாக இருந்தது.


Click it and Unblock the Notifications

