இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, சீனாவின் ஜாங்க் ஷான்ஷானின் அதிரடி வளர்ச்சியின் காரணமாக ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தை இழந்தார். தற்போது மீண்டும் முகேஷ் அம்பானி சில மாதங்களுக்கு முன்பு இழந்த ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்தை மீண்டும் பிடித்துள்ளார்.
கடந்த ஒருவாரமாக உலக நாடுகளில் பங்குச்சந்தை வர்த்தகம் பெரிய அளவிலான மாற்றங்களையும் பாதிப்புகளையும் எதிர்கொண்ட நிலையில் பல முக்கியமான நிறுவனங்களின் பங்கு மதிப்பு பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளது. இதனால் நிறுவனத் தலைவர்களின் சொத்து மதிப்பு பெரிய அளவிலான சரிவு அடைந்துள்ளது.
இதன் வாயிலாகவே ஜாங்க் ஷான்ஷானின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி தலைமையிலான நிர்வாகக் குழு தனது எண்ணெய் முதல் கெமிக்கல் வர்த்தகத்தைத் தனியாகப் பிரித்து அராம்கோ உடன் பங்கு விற்பனைக்காகப் பேச்சுவார்த்தை துவங்கியுள்ள நிலையில் கடந்த வாரம் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்புகள் மற்றும் வர்த்தகச் சரிவில் இருந்து தப்பித்தது.
80 பில்லியன் டாலர்
இதன் வாயிலாக ரிலையன்ஸ் பங்குகள் பெரிய அளவிலான சரிவை எதிர்கொள்ளாமல் குறைவாகப் பாதிப்புகளையே எதிர்கொண்டது. இதன் மூலம் 80 பில்லியன் டாலர் மதிப்புடன் ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளார். ஆனால் அம்பானி இடத்தைத் தட்டிப்பறித்த ஜாங்க் ஷான்ஷானின் சொத்து மதிப்பில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
ஜாங்க் ஷான்ஷான் - நொங்கபூ ஸ்பிரிங்
அமெரிக்கப் பத்திர முதலீட்டு மீதான லாபம், சீன சந்தையில் இருக்கும் மோசமான வர்த்தக நிலை ஆகியவற்றின் காரணமாக வாட்டர் பாட்டில் தயாரிப்பு நிறுவனமான நொங்கபூ ஸ்பிரிங் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 20 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் Zhong Shanshan-ன் சொத்து மதிப்பு 22 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.
சொத்து மதிப்பு வீழ்ச்சி
இந்த அதிரடி சரிவின் காரணமாகக் கடந்த ஒரு வாரத்தில் Zhong Shanshan-ன் சொத்து மதிப்பு 76.6 பில்லியன் டாலராகக் குறைந்தது. இதனால் உலகப் பணக்காரர்கள் பட்டியலிலும், ஆசியா பணக்காரர்கள் பட்டியலில் சரிந்தார். இதன் எதிரொலியாக 80 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி மீண்டும் ஆசியப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
முகேஷ் அம்பானி அசத்தல்
கடந்த இரண்டு வருடமாக அலிபாபா குழுமத்தின் முன்னாள் தலைவர் ஜாக் மா-வை பின்னுக்குத் தள்ளித் தொடர்ந்து ஆசியப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வரும் முகேஷ் அம்பானி, டிசம்பர் 2020ல் ஜாங்க் ஷான்ஷான் நிறுவனங்களின் ஐபிஓ மூலம் இவரின் சொத்து மதிப்பு ஒரு வருடத்தில் தாறுமாறாக உயர்ந்தது. இதனால் ஆசியப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை 2வது இடத்திற்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications