இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கொரோனா தொற்று காலத்தில் அதன் டெலிகாம் சேவை பிரிவான ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் மற்றும் ரீடைல் சேவை பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்து மாபெரும் முதலீட்டை திரட்டியது.
இந்த முதலீட்டை அடிப்படையாக வைத்து இரு நிறுவனங்களையும் பல முனையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தார். இந்த முதலீட்டு சுற்றுக்கு பின்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் தாறுமாறாக வளர்ச்சி அடைந்தது மறக்க முடியாது. இந்த நிலையில் முகேஷ் அம்பானி மீண்டும் இதேபோன்ற ஒரு வாய்ப்பை முதலீட்டாளர்களுக்கு கொடுக்க உள்ளார்.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான கடனை பெற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த முதலீட்டை வர்த்தக விரிவாகத்திற்கு பயன்படுத்துவது மட்டும் அல்லாமல் செப்டம்பர் மாதம் முடியும் கடன் திட்டத்திற்கு மறுநிதியளிக்கும் விதமாக இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.
இதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் தற்போது பேங்க் ஆப் அமெரிக்கா, சிட்டி குரூப், ஸ்டாண்டர்ட் சார்ட்டரேட் நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2020ல் தனது NET DEBT அளவை ஜீரோ-வாக குறைத்த பின்பு அதிகப்படியான கடன் வாங்கி வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தது.
இதில் முக்கியமாக அடுத்த 15 வருடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் renewable energy பிரிவில் மட்டும் 75 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது. இதேபோல் நிதி நிலையில் சிறப்பாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த வருடம் 3 பில்லியன் டாலர் முதலீட்டில் IPL ஒளிபரப்பு திட்டத்தை கைப்பற்றியது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அதானி குழுமம் குறித்து அறிக்கை வெளியிட்ட பின்பு புதிய கடன்களையும், முதலீடுகளையும் பெற அதானி குழுமம் அதிகப்படியான சவால்களை எதிர்கொள்கிறது. இதேவேளையில் சர்வதேச முதலீட்டு சந்தையும் மந்தமாக இருந்தது, ஆனால் கடந்த சில வாரங்களாக பல முன்னணி நிறுவனங்கள் புதிய முதலீட்டை திரட்டியுள்ளாதால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2 பில்லியன் டாலர் கடன் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் இன்று காலை வர்த்தகத்தில் 0.70 சதவீதம் உயர்ந்து 2,569.50 ரூபாயாக உள்ளது. இதேவேளையில 2023 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 0.17 சதவீதம் சரிந்துள்ளது, இந்த முதலீட்டின் வாயிலாக முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவிலான லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications