10 லட்சம் கோடிப்பு..! விண்ணைத் தொட்ட ரிலையன்ஸின் சந்தை மதிப்பு..!

கடந்த சில வாரங்களாகவே, முகேஷ் அம்பானிக்கு சுக்ரன் அருள் பரிபூரணமக இருப்பதை அவ்வப் போது காட்டிக் கொண்டே இருக்கிறார். அப்படி என்ன காட்டி விட்டார்..? அதை பார்ப்பதற்கு முன் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (சந்தை மதிப்பு) என்றால் என்ன என்பதைப் பார்த்து விடுவோம்.

பங்குச் சந்தையில், பட்டியலிடப்பட்டு நிறுவனங்கள் வர்த்தகமாவதைப் பார்த்து இருப்போம். அப்படி வர்த்தகம் ஆகும் பங்குகளுக்கு ஒரு விலை இருக்கும். மொத்த பங்குகள் * ஒரு பங்கின் விலை = மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்.

10 லட்சம் கோடிப்பு..! விண்ணைத் தொட்ட ரிலையன்ஸின் சந்தை மதிப்பு..!

ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மொத்த பங்குகளின் மதிப்பு (Market Capitalization) என ஒன்றைக் குறிப்பிடுவார்கள். சுருக்கமாக, ஒரு நிறுவன பங்கின் இன்றைய விலைக்கு, அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் விற்றால் என்ன கிடைக்குமோ அதைத் தான் மொத்த சந்தை மதிப்பு என்கிறோம்.

சில வாரங்களுக்கு முன், (சுமார் இரண்டு மாதங்கள் என வைத்துக் கொள்வோம்) அப்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு முதன் முதலாக 8 லட்சம் கோடி ரூபாய் என்கிற உச்சத்தைத் தொட்டது. ஓகே. அடுத்த சில வாரங்களில் 9 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டது. ஆனால் இன்று கடைசியாக இந்தியாவில் எந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனமும் தொடாத (கிட்டத் தட்ட தொட முடியாத) மிகப் பெரிய உச்சத்தைத் தொட்டு விட்டது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

ஆம், இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்) 10 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டு விட்டது.

இன்று பங்குச் சந்தையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை 1584 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. இந்த விலை ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாழ்நாள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ரிலயன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த 633 கோடி பங்குகள் * 1584 = 10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பைத் தொட்டு இருக்கிறது.

இது இந்திய சந்தை மதிப்பு வரலாற்றிலேயே புதிய உச்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உயரத்தை இதுவரை எந்த ஒரு இந்திய நிறுவனமும் தொட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது கம்பெனி ரீதியில், ஒரு பெரிய சாதனை என்றாலும், அம்பானிக்கும் தனிப்பட்ட முறையில் லாபம் கொடுத்து இருக்கிறது.

கடந்த மார்ச் 2019-ல் ஃபோர்ப்ஸ் நிறுவன கணிப்பின் படி, முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 50 பில்லியன் டாலர். ஆனால் இந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை உயர்வு போன்ற சில காரணங்களால், இப்போது நம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு அதிகரித்து இருக்கிறது தெரியுமா..? 10.7 பில்லியன் டாலர் (60.7 பில்லியன் டாலர்).

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+