இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நிர்வாகம் இந்த வருடத்தின் துவக்கம் முதலே முகேஷ் அம்பானி தனது வாரிசு கைகளுக்கு வர்த்தகத்தை மாற்றும் பணியில் இறங்க முடிவு செய்தது.
இதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைமை அலுவலகத்தில் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோருக்கு தனித்தனி அலுவலகம், நிர்வாக அணி ஆகியவை அளிக்கப்பட்டுப் பொறுப்பைக் கைமாற்றும் பணிகள் விறுவிறுப்பாகப் நடந்தது.
இதைத் தொடர்ந்து முகேஷ் அம்பானி சேர்மன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் முக்கிய வர்த்தகப் பிரிவான டெலிகாம் சேவை அளிக்கும் ரிலையன்ஸ் ஜியோ துவக்க நாளில் இருந்து முகேஷ் அம்பானியும் அவரது மூத்த மகனான ஆகாஷ் அம்பானி தலைமையில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் இதர அனைத்து டெலிகாம் சேவை பிரிவுகளும் ஆகாஷ் அம்பானி கைகளுக்குப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது.
முகேஷ் அம்பானி
ஆனால் சற்றும் எதிர்பார்க்காத வகையில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் (director) பதவியை ஜூன் 27 ஆம் தேதி ராஜினாமா செய்ததை அடுத்து, ரிலையன்ஸ் ஜியோ நிர்வாகம் ஆகாஷ் அம்பானி-யை சேர்மன் ஆக நியமிக்க அதன் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகச் செவ்வாய்க்கிழமை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட்
இதேவேளையில் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் உட்பட அனைத்து ஜியோ டிஜிட்டல் சேவை பிராண்டுகளையும் வைத்திருக்கும் முதன்மை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட்டின் சேர்மன் ஆக முகேஷ் அம்பானி தொடர்ந்து இருப்பார் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் என்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் தாய் நிறுவனம்.
ஆகாஷ் அம்பானி
இதேபோல் ஆகாஷ் அம்பானி சேர்மன் ஆக மட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் ஜியோ-வின் Non Executive Director ஆகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
புதிய நிர்வாக இயக்குநர்
இதோடு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிர்வாகக் கூட்டத்தில் ஜூன் 27, 2022 முதல் அடுத்த 5 வருடத்திற்கு இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பங்கஜ் மோகன் பவார் நியமிக்கப்பட்டு உள்ளார். இதோடு ரமிந்தர் சிங் குஜ்ரால் மற்றும் கே.வி. சௌத்ரி, கூடுதல் இயக்குநர்களாக அடுத்த 5 வருடத்திற்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் பங்குகள்
டிராய் தரவுகள் படி ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் மாதத்தில் 16.8 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. மேலும் இன்றைய வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் பங்குகள் 1.49 சதவீதம் அதிகரித்து 2529 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications