இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளை டிஜிட்டல் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யும் முகேஷ் அம்பானி-யின் ஜியோசினிமா, கிரிக்கெட் ஒளிபரப்புகள் மூலம் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. சமீபத்தில் நடந்த சிஎஸ்கே போட்டியின் போது இத்தளத்தில் சுமார் 2.2 கோடி பேர் ஓரே நேரத்தில் ஜியோசினிமா தளத்தில் மேட்ச் பார்த்துள்ளது புதிய சாதனையாகும்.
இந்த பிரபலத்தை பயன்படுத்தி பணமாக்கவும், ஐபிஎல் போட்டிக்கு பின்பும் தொடர்ந்து ஜியோசினிமா தளத்தில் அதிகப்படியான பார்வையாளர்களையும், வர்த்தகத்தையும் பெற்ற சுமார் 100 திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியஸ்-களை அறிமுகம் செய்ய உள்ளதாக ஜோதி தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.

இது மட்டும் அல்லாமல் ஜியோசினிமா தளத்தில் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஜோதி சமீபத்தில் ஒரு இன்டர்வியூவ்-ல் தெரிவித்துள்ளார். யார் இந்த ஜோதி தேஷ்பாண்டே..? இவர் முகேஷ் அம்பானியின் எண்டர்டெயின்மென்ட் வர்த்தகத்தில் வலது கையாக உயர்ந்தது எப்படி..?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் பாரமவுண்ட் நிறுவனங்களின் கூட்டணி நிறுவனமான வயாகாம் 18 இன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் தான் ஜோதி தேஷ்பாண்டே. அறிக்கைகளின்படி, ஐபிஎல் தொடக்க வாரத்தில் மட்டுமே ஜியோசினிமா தளத்தில் சுமார் 1.47 பில்லியன் பார்வைகளைப் பெற்றது. இந்த வெற்றியில் பெரும் பகுதி வெற்றி ஜோதி-க்கு உள்ளது.
ஜோதி தேஷ்பாண்டே Viacom 18 இன் தலைமை நிர்வாக அதிகாரியாக 2021 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார், இவரது நிர்வாகத்தின் கீழ், ரிலையன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள Viacom 18 நிறுவனத்தின் வருவாய் பெரிய அளவில் உயர்ந்தது. அவர் 2018 ஆம் ஆண்டு முதல் மீடியா பிளாட்ஃபார்ம் மற்றும் கன்டென்ட் பிரிவின் தலைவர் அலுவலகத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
முகேஷ் அம்பானியின் மீடியா துறை வர்த்தகத்தில் அவருக்கு நம்பிக்கைக்குரியவர்களில் இவரும் ஒருவர். ஜோதி தேஷ்பாண்டே நெட்வொர்க், பாலாஜி டெலிஃபிலிம்ஸ் மற்றும் சாவ்ன் மீடியா ஆகியவற்றின் நிர்வாக குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். சுமார் 30 வருடம் மீடியா துறையில் இருக்கும் இவர் அனைத்து விதமான வர்த்தகத்தையும் கையாண்டு உள்ளார்.

வயாகாம் 18 நிறுவனத்தில் இணைவதற்கு முன்பு, 2009 முதல் ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் எம்டி மற்றும் குரூப் சிஇஓவாக இருந்தார் ஜோதி தேஷ்பாண்டே. பல முன்னணி நிறுவனத்தில் பணியாற்றி படிப்படியாக வளர்ந்த ஜோதி தேஷ்பாண்டே இன்று ஜியோசினிமா-வை இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளமாக மாற்றும் பொறுப்பில் உள்ளார்.
மும்பையில் பிறந்து வளர்ந்த ஜோதி தேஷ்பாண்டே, மும்பை சேத் சுனிலால் தாமோதர்தாஸ் பர்பிவாலா உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பள்ளியின் சிறந்த மாணவிகளில் ஒருவராகவும் இருந்துள்ளார். மும்பையின் புகழ்பெற்ற நர்சி மோஞ்சியிடம் வணிகம் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மும்பை எஸ்பி ஜெயின் கல்லூரியில் எம்பிஏ படித்தார்.
சிறுவயதில் ஜோதி தேஷ்பாண்டே-வுக்கு போலியோ தடுப்பூசி போடப்பட்ட அடுத்த நாளே அவரால் நடக்க முடியவில்லை. சிறுவயதிலேயே போலியோ பாதிப்பு ஏற்பட்டது. அரசு உதவி பெறும் பள்ளியின் டாப் மாணவியாக இருந்தார். இவர் தேசி பாய்ஸ் என்ற படத்தையும் தயாரித்தார். சமீபத்தில், அவர் FICCI மீடியா & பொழுதுபோக்கு வாரியத்தின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டார், இந்த நிர்வாக குழுவின் முதல் பெண்மணி.


Click it and Unblock the Notifications