உலகளவில் மருத்துவ தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், நோய் வந்த பின்பு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கவும், மருத்து கொடுப்பது இயல்பான ஒன்று தான். ஆனால் நோய் வருவதற்கு முன்பே அதை பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ள ஒரு பரிசோதனை உள்ளது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
ஆசியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி இப்படிபட்ட ஒரு மருத்து பரிசோதனை திட்டத்தை தான் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கச்சா எண்ணெய், டெலிகாம், ரீடைல், நியூ எனர்ஜி வர்த்தகங்களில் இருப்பது அனைவருக்கும் தெரியும் எப்போது மருத்து துறையில் வந்தது.
முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செய்த பல முதலீடுகள், நிறுவன கைப்பற்றலில் Strand Life Sciences நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் வாயிலாக தான் இந்தியாவில் புதிய ஜினோம் சீக்வென்ஸ் டெஸ்ட்டிங் சேவை அறிமுகம் செய்ய உள்ளது.
ஹெல்த் கேர் துறை
அமெரிக்க ஹெல்த் கேர் துறையில் 23andMe போன்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எப்படி மலிவான விலையில் பல முக்கிய சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கு கொடுத்து பெரும் புரட்சியை செய்து வருகிறதோ அதேபோன்ற முயற்சியை முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எடுக்க உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் Genetic Mapping துறையில் இறங்க உள்ளது, வேகமாக வளர்ந்து வரும் இந்திய ஹெல்த்கேர் சேவை சந்தையில் அடுத்த சில வாரத்தில் 12000 ரூபாய் விலையில் ஜினோம் சீக்வென்ஸ் டெஸ்ட்டிங் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது என இப்புதிய டெஸ்டிங்-ஐ உருவாக்கிய Strand Life Sciences நிறுவனத்தின் சிஇஓ-வான ரமேஷ் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
Strand Life Sciences நிறுவனம்
ஆசியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி 2021 ஆம் ஆண்டில் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஹெல்த் கேர் நிறுவனமான Strand Life Sciences நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளை கைப்பற்றியது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் கட்டுப்பாடு முழுமையாக ரிலையன்ஸ் கையில் உள்ளது.
ஜினோம் சீக்வென்ஸ் டெஸ்ட்டிங்
Strand Life Sciences அறிமுகம் செய்யும் ஜினோம் சீக்வென்ஸ் டெஸ்ட்டிங் சேவை இந்தியாவில் தற்போது கிடைக்கும் பிற சேவைகளை காட்டிலும் 86 சதவீதம் குறைவான விலை கொண்டது. சரி ஜினோம் சீக்வென்ஸ் டெஸ்ட்டிங் என்றால் என்ன..? இதனால் என்ன நன்மை..?
விளக்கம்
ஜினோம் சீக்வென்ஸ் டெஸ்ட்டிங் அல்லது முழு மரபணு வரிசைமுறை சோதனை என்பது ஒரு மரபணுவில் கிட்டத்தட்ட அனைத்து டிஎன்ஏ மாறுபாடுகளையும் கண்டறியும் திறன் கொண்ட ஒரு விரிவான சோதனை ஆகும். இந்த ஜினோம் சீக்வென்ஸ் டெஸ்ட்டிங் மூலம் ஒருவரின் மரபணுவில் 6000க்கும் அதிகமான உடல் உபாதகளை வர வாய்ப்பு உள்ளதா என்பதை கண்டறிய முடியும்.
நன்மை
மரபணு சோதனையின் வெளிப்படையான நன்மை என்னவென்றால் புற்றுநோய் போன்ற குறிப்பிட்ட நோய் தாக்குதல் குறித்த ஒருவருக்கான ஆபத்து அளவுகள் நன்கு புரிந்துகொள்வதற்கான வாய்ப்பாகும். இந்த சோதனை 100 சதவீதம் சரியான தீர்வுகளை தரவில்லை என்றாலும் பெரும்பாலான உடல்நலம் குறித்து முடிவுகளை எடுக்க இது கட்டாயம் உதவும்.


Click it and Unblock the Notifications