இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஞாயிற்றுக்கிழமை 2022-23 ஆம் நிதியாண்டுக்கான வருடாந்திர அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் அடுத்த டார்கெட் என்ன, எந்த துறையில் அதிகம் கவனம் செலுத்த போகிறது என்பதை விளக்கியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலீட்டாளர்களுக்கு பெரிய லாபத்தை கொடுத்த ஜியோ பைனானசியல் சர்வீசஸ் நிறுவனம் இந்த அறிக்கையில் முக்கியதுவம் பெற்று இருந்தாலும், முகேஷ் அம்பானி கவனம் முழுவதும் நியூ எனர்ஜி துறையில் தான் உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வருடாந்திர அறிக்கையில் முகேஷ் அம்பானி, இந்தியாாவில் பயன்படுத்தப்பட்டு வரும் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாகவும், இதற்கு இணையாகவும் மலிவு விலை கிரீன் ஹைட்ரஜென் வாயுவை கொண்டு வர வேண்டும் என்பதை முக்கிய இலக்காக கொண்டு உள்ளார்.
உலகளவில் தற்போது கிரே ஹைட்ரஜென் (grey hydrogen) தயாரிப்பில் முன்னோடியாக இருப்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இதில் செலவுகளை குறைக்கவும் வேகமாக சந்தைப்படுத்தும் இலக்குடன் டென்மார்க் நாட்டின் Stiesdal நிறுவனத்துடன் இணைந்து அதன் Alkaline Electrolyser technology-ஐ பயன்படுத்த உள்ளது. இது கிரீன் ஹைட்ரஜென் உருவாக்காவதிலும், சந்தைப்படுத்துவதிலும் முதல் படியாக அமையும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
மேலும் கிரீன் ஹைட்ரஜென் உற்பத்தியை சாத்தியமாக்க gasifier-களில் biomass தீ மூட்டுவதன் மூலம் சாத்தியமாகும் நிலையில், முதல் முறையாக இதை செய்து 2022-23ல் சாதனை படைத்த ரிலையன்ஸ், தற்போது மொத்த FEED அளவில் சுமார் 11 சதவீதம் பயோமாஸ்-ஐ பயன்படுத்தி வருகிறது. இது 100 சதவீத அளவை எட்டும் போது ரிலையன்ஸ் கிரீன் ஹைட்ரஜென் உற்பத்தி நிலையை அடையும், இதுவரையில் க்ரே ஹைட்ரஜென் தான்.
இதற்காக ரிலையன்ஸ் குஜராத் ஜாம்நகரில் Dhirubhai Ambani Green Energy Giga Complex அமைக்க வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்குல் கிரீன் ஹைட்ரஜென் உற்பத்தியை ரிலையனஸ் துவங்கும்.
இதோடு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2030க்குள் 100 ஜிகாவாட் சோலார் மின்சார உற்பத்தி தளத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர உள்ளது. மேலும் குஜராத் ஜாம்நகரில் Giga-scale electrolyser அமைக்க இத்துறையில் இருக்கும் முன்னணி electrolyser நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
Jio Financial Services மூலம் நிதி துறையில் எளிமையான, மலிவான மற்றும் புதுமையான டிஜிட்டல் நிதி சேவைகளை அளிக்க உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. Jio Financial Services நிறுவனம் ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய ரீடைல் மற்றும் மொத்த விலை வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான கடன்களை அளிக்கும்.
இந்த நிலையில் கடந்த மாதம் அமெரிக்காவின் மாபெரும் முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக் உடன் இணைந்து இந்திய சொத்து மேலாண்மை துறையில் Jio Financial Services இறங்க உள்ளது. இதற்காக 50:50 கூட்டணியில் தலா 150 மில்லியன் டாலர் முதலீடு செய்து ஜியோ பிளாக்ராக் என்ற நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications