இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் தலைவர் முகேஷ் அம்பானியை விட, அவரின் உறவினர்களான ஹிடல் மேஸ்வானி மற்றும் நிகில் மேஸ்வானி அதிக சம்பளம் வாங்குகின்றனர்.
யார் இந்த ஹிடல் மேஸ்வானி மற்றும் நிகில் மேஸ்வானி..? இவர்களுக்கும் முகேஷ் அம்பானிக்கும் என்ன உறவு..? ஹிடல் மேஸ்வானி மற்றும் நிகில் மேஸ்வானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் எந்த பதவியில் உள்ளனர்..?
அம்பானி குடும்பம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நிறுவனரான திருபாய் அம்பானி-யின் மூத்த சகோதரி திரிலோச்சனா பென். திரிலோச்சனா பென்-னின் பேரன்கள் தான் ஹிடல் மேஸ்வானி மற்றும் நிகில் மேஸ்வானி. இவ்விருவரின் தந்தை ரசிக்பாய் மேஸ்வானி, திருபாய் அம்பானி உடன் இணைந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் துவங்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.
யார் இந்த ஹிடல் மேஸ்வானி!
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் முக்கிய குழுவில் ஒரு நபராக இருப்பவர்தான் ஹிட்டல் மேஸ்வானி. ஹிடல் மேஸ்வானி ரசிக்லால் மேஸ்வானியின் மகன் மற்றும் முகேஷ் அம்பானியின் மருமகனும் ஆவார்.
இவர் அமெரிக்காவில் உள்ள வார்டன் பள்ளியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பிற அனைத்து உற்பத்தி பிரிவுகளும் ஹிட்டல் மேஸ்வானி மேற்பார்வையின் கீழ் தான் உள்ளது.
ஹிடல் மேஸ்வானி - ரிலையன்ஸ்
ஹிடல் மேஸ்வானி 1990 இல் RIL இல் சேர்ந்தார் மற்றும் 1995 முதலே ரிலையன்ஸ் நிர்வாக குழுவில் இணைந்து பணியாற்றி வருகிறார். இவர் ஹசிரா பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகங்கள் உட்பட ரிலையன்ஸின் பல மெகா திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் மூளையாக இருந்து இன்றுவரை இந்நிறுவனங்களின் வளர்ச்சியிலும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
ஹிடல் மேஸ்வானி சம்பளம்!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வளர்ச்சியில் இவரின் பங்கு அதிகம் என்பதால் இவரின் சம்பளமும் அதிகம் தான். அதுவும் ஹிடல் மேஸ்வானியின் 2021-22 ஆண்டு சுமார் ரூ.24 கோடி சம்பளம் வாங்குவதாக தரவுகள் கூறுகின்றன.
இவரைத் தொடர்ந்து ரிலையன்ஸில் அதிகம் சம்பளம் வாங்கும் நபராக நிகில். R. மேஸ்வானி உள்ளார்.
யார் இந்த நிகில் மேஸ்வானி!
நிகில் மேஸ்வானி ரிலையன்ஸின் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான ரசிக்லால் மேஸ்வானியின் மகன் ஆவார். இவர் முகேஷ் அம்பானியின் மருமகன் மற்றும் ஹிடல் மேஸ்வானியின் சகோதரரும் ஆவார்.
ரிலையன்ஸின் இணைந்த நிகில்!
நிகில் மேஸ்வானி 1986 ஆம் ஆண்டு முதலே ரிலையன்ஸ் குழுமத்தில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். அதன்பின் 1988 ஆண்டு முதலே ரிலையன்ஸ் வாரியத்தில் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்ட அதன்பின் முழு நேர இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்பின் ரிலையன்ஸ் குழுவின் வாரிய உறுப்பினராகவும் உள்ளார். நிகில் மேஸ்வானி வேதியியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (UICT) முன்னாள் மாணவரும் ஆவார்.
மும்பை இந்தியன்ஸ்- நிகில் மேஸ்வானி!
ஐபிஎல் டி20 இல் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான மும்பை இந்தியன்ஸில் அனைத்து நிர்வாகம், மற்றும் விவகாரங்களையும் இவர் கவனித்து கொள்ளும் பொறுப்பை ஏற்றுள்ளார்.
முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானியும் மும்பை இந்தியன் அணியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகில் மேஸ்வானியின் சம்பளம்!
இவருக்கும் ஹிடல் மேஸ்வானியை போலவே, ரிலையன்ஸ் நிறுவனத்தில் 2021-22 ஆம் ஆண்டின்படி ரூ.24 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறது.
சம்பளம் வாங்காத முகேஷ் அம்பானி!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான் முகேஷ் அம்பானி 2008-09 ஆண்டுகளில் அவரின் சம்பளத்தை ரூ.15 கோடியாக குறைத்துக்கொண்டார். அதன்பின் கோவிட்-19 தொற்று சமயங்களில், நிறுவனத்தில் இருந்து ஊதியம் வாங்குவதை கைவிட்டு, நிறுவனத்தில் சம்பளமே வாங்காமல் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications