மும்பை: முகேஷ் அம்பானியின் முக்கிய உதவியாளரான மனோஜ் மோடியின் மகள் பக்தி மோடி அண்மையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரீடைல் பிரிவு தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்றுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரீடைல் பிரிவுக்கு தலைவராக முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி செயல்பட்டு வருகிறார். இவர் சார்பில் தொடங்கப்பட்டது தான் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யக்கூடிய டைரா (Tira) என்ற தளம்.
டைரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக முகேஷ் அம்பானியின் முக்கிய உதவியாளரான மனோஜ் மோடியின் மகள் பக்தி மோடி பொறுப்பேற்றுள்ளார். பக்தி மோடி , ஈஷா அம்பானிக்கு நெருக்கமானவராகவும் நீண்ட காலமாக ரிலையன்ஸ் ரீடைல் பிரிவில் வேலை செய்து வருபவராகவும் இருக்கிறார்.

கடந்து 2023 ஆம் ஆண்டில் தான் ஈஷா அம்பானி டைரா அழகு சாதன பொருள் தளத்தை அறிமுகம் செய்தார். இதனை அடுத்து டைரா நிறுவனத்தின் முக்கிய அதிகாரியாக பக்தி மோடி செயல்பட்டு வந்தார். தற்போது அவருக்கு தலைமை செயல் அதிகாரி என புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது சந்தையில் நைகா, டாடா, மிந்த்ரா ஆகிய நிறுவனங்களோடு டைரா போட்டியிட்டு வருகிறது. முக்கியமான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு வழிகளிலும் ஒரு முக்கியமான நிறுவனமாக உருவாக வேண்டும் என போட்டி போட்டு வருகிறது.
இந்த தளத்தில் பல்வேறு அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. படிப்படியாக இவர்கள் ஆங்காங்கே கடைகளையும் நிறுவி வருகின்றனர். இந்த நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக வேண்டும் என்ற நோக்கத்தில் அதன் பொறுப்பை பக்தி மோடியிடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பக்தி மோடியை பொறுத்தவரை ரிலையன்ஸ் ரீடைல் பிரிவில் மிக ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு அதிகாரியாக இருந்து வருகிறார். இவர் 2022 ஆம் ஆண்டு ரிலைன்ஸ் டிரெண்ட்ஸ் என்று நிறுவனத்தின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.
சர்வதேச அளவில் ஆடம்பரமான பிராண்டுகளை இந்தியாவில் ரிலையன்ஸ் ரீடைல் வாயிலாக விற்பனை செய்வது போன்ற பல்வேறு உத்திகளை இவர் கொண்டு வந்தவர். பக்தி மோடியை பொருத்தவரை குடும்ப ரீதியாகவும், ரிலையன்ஸ் குடும்பத்துடன் ஆழமான உறவு கொண்டவர்.
அவரது தந்தை மனோஜ் மோடி, முகேஷ் அம்பானிக்கு நெருக்கமான மற்றும் நம்பகமான உதவியாளர்களுள் ஒருவர். அவர் ரிலைன்ஸ் ரீடைல், ஜியோ பிளாட்பார்ம் உள்ளிட்ட முக்கியமான ரிலையன்ஸ் குடும்ப நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்.


Click it and Unblock the Notifications