ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.
இந்த இரட்டை குழந்தைகளில் ஒன்று ஆண், ஒன்று பெண் குழந்தையாகும். இது பெண் குழந்தைக்கு ஆதியா என்றும், ஆண் குழந்தைக்கு கிருஷ்ணா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த 2018 ம் ஆண்டின் இறுதியில் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், பிரமல் குழுமத்தியின் தலைவர் அஜய் பிரமல் மற்றும் சுவாதி பிரமலின் மகன் ஆனந்த் பிரமலுக்கும் திருமணம் நடந்தது.
மறக்க முடியாத சந்தோஷமான தருணம்
நவம்பர் 19ம் தேதி பிறந்த இந்த குழந்தைகளுக்கு அனைவரின் ஆசிர்வாதமும், வாழ்த்துகளும் தேவை என இரு வணிக சாம்ராஜ்ஜியங்களும் அறிவித்துள்ளது. கடவுளின் ஆசீர்வாதத்தால் குழந்தைகள் இருவரும் நலமாக இருக்கின்றனர் என இந்த வணிக குழுமங்கள் அறிவித்துள்ளன.
ஆடம்பர திருமணம்
மிகப் பெரிய அளவில் ஆடம்பரமாக செய்யப்பட்ட இவர்களின் திருமணத்தில் பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். இஷா அம்பானிக்கும், ஆனந்த் பிரமலுக்கும் அவர்களின் வாழ்க்கையில், இது மறக்க முடியாத சந்தோஷமான தருணம் எனலாம்.
ரிலையன்ஸ் சில்லறை வணிக தலைவர்
சர்வதேச அளவிலான இந்த வணிக சாம்ராஜ்ஜியத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, அடுத்த தலைமுறை வாரிகளுக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்றவாறு, தனது மகள் இஷா அம்பானிக்கு ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தின் புதிய தலைவராக நியமித்தார். ஆசியாவின் மிகப்பெரிய சில்லறை வணிக குழுவாக இருக்கும் ரிலையன்ஸ் சில்லறை வணிகம், ஆசியாவில் சிறந்த 10 நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
இரு குழந்தைகளுக்கு தாய்
இதன் வருவாய் 2 லட்சம் கோடி வருவாயினை எட்டியுள்ளது. முகேஷ் அம்பானி அதன் 45வது வருடாந்திர கூட்டத்தில், இஷா அம்பானியை தனது குழுமத்தின் சில்லறை வணிகத்திற்கு தலைவராக அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் தற்போதை இரட்டிப்பு சந்தோஷமாக்கும் விதமாக இஷா அம்பானிக்கு சிறந்த தொழிலதிபர் என்பதை தாண்டி, தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் மாறியுள்ளார்.
இஷா அம்பானி
வருடாந்திர கூட்டத்தில் பேசிய இஷா அம்பானி மளிகை ஆர்டர்களை வைப்பது மற்றும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி பணம் செலுத்துவது குறித்து விளக்கம் கொடுத்தார். இந்த ஆண்டில் நாங்கள் எங்களது எஃப் எம் சி ஜி வணிகத்தினை தொடங்குவோம் என்றும் கூறியிருந்தார்.
நிகர லாபம்
ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தின் நிகர லாபம் 36% அதிகரித்து, 2305 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1695 கோடி ரூபாயாக இருந்தது. இதன் கேஸ் புராபிட் 45% அதிகரித்து, 3324 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மொத்த வருவாய் விகிதம் 42.9% அதிகரித்து, 64,920 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் எபிடா விகிதம் 4404 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மகனின் பேரன் பிரித்வி
முன்னதாக முகேஷ் அம்பானியின் மக ன் ஆகாஷ் அம்பானி மற்றும் ஸ்லோகா மேத்தா ஜோடிக்கு கடந்த டிசம்பர் 10, 2020ல் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் பிரித்வி ஆகும். இவர் தான் அம்பானிக்கு முதல் பேரன் ஆவார். தற்போது இந்த பட்டியலில் ஆதியாவும், கிருஷ்ணாவும் இணைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications