இந்திய மக்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவன ஐபிஓ-வின் கடைசி நாள் இன்று என்பதால் முதலீட்டாளர்கள் தங்களுடைய கடைசி வாய்ப்பை இழக்கக் கூடாது என்பதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரீடைல் சந்தை முதலீட்டாளர்களுக்கான விற்கப்பட்ட 19.75 கோடி பங்குகளுக்கு, முதலீட்டாளர்கள் 106.62 கோடி பங்குகளுக்கு இணையான முதலீட்டைச் செய்துள்ளனர்.

இதன் மூலம் ஜியோ ஐபிஓ 5.40 மடங்கு சப்ஸ்கிரைப் செய்யப்பட்டு, 30000 கோடி ஐபிஓ-வுக்கு 1,19,303.56 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு விருப்பங்கள் குவிந்துள்ளதால் மிகப்பெரிய வெற்றியாக மாறியுள்ளது, இதை முகேஷ் அம்பானி குடும்பம் கொண்டாடி வருகிறது.
தற்போதைய சிக்கல் என்னவென்றால் யாருக்கெல்லாம் ஜியோ ஐபிஓ-வில் அலாட்மென்ட் கிடைக்கும் என்பது தான், அதிக எண்ணிக்கையில் சப்ஸ்கிரைப் செய்யப்படும் போது அலாட்மென்ட் பெறுவதற்கான வாய்ப்புகள் குறையும்.
உதாரணமாக ஜியோ ஐபிஓ-வில் ஜெரோதா நிறுவனத்தின் இணை நிறுவனரான நிகில் காமத் 500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை தனது Rainmatter நிறுவனத்தின் வாயிலாக விண்ணப்பம் செய்திருந்த நிலையில், அதிகப்படியான டிமாண்ட் காரணமாக வெறும் 25 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை மட்டுமே பெற்றுள்ளதாக வெளிப்படையாகத் தெரிவித்தார்.
இப்படி ஆங்கர் முதலீட்டாளர்கள் முதல் ரீடைல் முதலீட்டாளர்கள் வரையில் அனைத்து பிரிவிலும் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் வேளையில் இந்த ஐபிஓ-வில் அலாட்மென்ட் கிடைப்பதில் பெரும் போராட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஐபிஓ-வில் ரிலையன்ஸ் குழும ஊழியர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான 46,94,836 பங்குகளைத் தனியாக ஒதுக்கப்பட்டு இருந்தது.
ரிலையன்ஸ் ஊழியர்கள் இந்த ஐபிஓ-வில் பங்கு பெறுவதற்காக 15 நாட்களுக்கு முன்பே அக்டோபர் மாதத்திற்கான சம்பளத்தை கிரெடிட் செய்யப்பட்டதன் வாயிலாக 1,079.37 கோடி ரூபாய்க்கு இணையான முதலீட்டு விருப்பம் வந்துள்ளது.
இதன் மூலம் ஊழியர்களுக்கான ஒதுக்கப்பட்ட பங்குகளில் சுமார் 2 மடங்கு சப்ஸ்கிரிப்ஷன் செய்யப்பட்டு உள்ளது. எனவே முகேஷ் அம்பானியின் 15 நாட்களுக்கு முன்கூட்டியே சம்பளம் கொடுக்கும் திட்டம் பலன் கொடுத்துள்ளது.
இதேபோல் ஐபிஓ திறந்த 100 நிமிடத்திற்குள் முழுமையாக சப்ஸ்கிரைப் செய்யப்பட்டது பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஜியோ ஐபிஓ ரீடைல் முதலீட்டாளர்களுக்கான கதவுகள் இன்று மூடப்படும் நிலையில் அக்டோபர் 28ஆம் தேதி பட்டியலிடப்படும்.


Click it and Unblock the Notifications
