முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ நிறுவனம் ஐபிஓ வெளியிட்டு கடந்த புதன்கிழமை பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டது. இதற்காக மும்பையில் உள்ள தேசிய பங்கு சந்தையில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்கு வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்வில் முகேஷ் அம்பானியின் பேரக் குழந்தைகளின் குறும்புத்தனமான செயல்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
முகேஷ் அம்பானி மகன் ஆகாஷ் அம்பானியின் குழந்தைகள் மற்றும் மகள் இஷா அம்பானியின் குழந்தைகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். பெரும்பாலும் எந்த நிகழ்வாக இருந்தாலும் அம்பானி குடும்பத்தினர் பேரக் குழந்தைகளையும் அழைத்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அப்படி தான் ஜியோ பட்டியலிடப்படும் நிகழ்விலும் அழைத்து வந்திருந்தனர். முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினர் சீரியஸாக நிகழ்ச்சியில் பேசி கொண்டிருக்க இந்த பேரக் குழந்தைகள் விடாப்பிடியாக குறும்புத்தனம் செய்து கொண்டிருந்தனர்.

மேடையில் செய்யப்பட்டிருந்த மலர் அலங்காரங்களுக்கு நடுவே படுத்துக்கொண்டு ஒரு குழந்தை விளையாடியதி. ஆகாஷ் அம்பானி மேடையில் உரையாற்றி கொண்டிருந்த போது, குழந்தை ஒன்று மேடையில் ஓடி திரிந்தது. மற்றொரு கிளிப்பில், டிரோன் கேமராவை கண்டு உற்சாகமடைந்து குதூகலிப்பது பதிவாகியுள்ளது.
இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் பணக்கார மனிதரின் குழந்தைகளும் கூட மற்ற குழந்தைகளை போலவே போன்களை பார்த்தே வளர்கின்றனர் என சுட்டிக்காட்டும் வகையிலான காட்சிகளும் இணையத்தில் பரவி வருகின்றன.
Even the kids of the rich are just like us 😂Ambani's kids get excited 😆 #AnantAmbani | #jioipolisting #akashambani | #IndiavsChina#ArnabCyclone |#BiggBoss20WE WATCH BB20 FOR QAZI https://t.co/pKRAeymfji
— W𝐢𝐬𝐝𝐨𝐦 Of 𝘽𝙝𝙖𝙧𝙖𝙩 (@WisdomofBharat1) October 28, 2026
Billionaires talk business, but kids always steal the show! As Akash Ambani speaks at Jio’s NSE event, the little bosses take over the stage. 😂❤️ https://t.co/aFYbsjRghV
— Himanshu Jain (@HemanNamo) October 28, 2026
இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் இணையத்தில் பலவிதமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். அம்பானிக்கே பேர பிள்ளையாக இருந்தாலும் அவர்களும், குழந்தை தான் அம்பானி குடும்ப குழந்தைகளுக்கும் மற்ற குழந்தைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரு குழந்தை ஓடிவிளையாடுவதை குறிப்பிட்டு, இந்த குழந்தை பிற்காலத்தில் ஏதேனும் ஒரு பெரிய கம்பெனிக்கு CEO-வாகி இதை பார்க்கும்போது எப்படி இருக்கும்?" என ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். குழந்தைகளை பார்த்து கொள்ள ஆட்களை அழைத்து வராமல் குடும்பத்தினரே அருகில் இருந்து கவனித்து கொள்வதைப் பார்ப்பது மிகவும் அழகாக இருக்கிறது என்றும், குழந்தைகள் செய்யும் சேட்டைகளையும் அடம்பிடிப்பதையும் பெற்றோர் கோபப்படாமல் மிகுந்த பொறுமையோடும் அன்போடும் கையாள்வது பாராட்டுக்குரியது என்றும் மற்றொரு நெட்டிசன் கூறியுள்ளார்.
Ambani's kids get excited when they see a drone camera..😭😂 https://t.co/lMo5MSgWwH
— Dr Priyanka (@Dr_Priyanka0) October 28, 2026
All kids are same, no different for Ambani’s 😌 https://t.co/jmz7UcObS2
— Oxomiya Jiyori 🇮🇳 (@SouleFacts) October 28, 2026
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதியினருக்கு மொத்தம் நான்கு பேரக் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ஆகாஷ் அம்பானி - ஸ்லோகா மேத்தா தம்பதியினருக்கு பிரித்வி ஆகாஷ் அம்பானி மற்றும் வேதா ஆகாஷ் அம்பானி ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஈஷா அம்பானி - ஆனந்த் பிராமல் தம்பதியினருக்கு ஆதியா சக்தி பிராமல் மற்றும் கிருஷ்ணா பிராமல் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications

