டெல்லி : உலகம் முழுவதும் தான் என்ன தான் தொழில் செய்தாலும் அதில் கொடிகட்டி பறக்கும் அண்ணன் முகேஷ் அம்பானி, தம்பியின் சொத்தான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் சொத்தை வாங்க விண்ணபிக்காத நிலையில், கடைசி நேரத்தில் கால அவகாசத்தை நீட்டிக்க கோரினார்.
இந்த நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் தாங்கள் கால அவகாசம் கேட்ட நிலையில், அது கொடுக்கப்படவில்லை. ஆனால் இதே மற்ற நிறுவனங்கள் கேட்கும்போது அது கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு தலைபட்சமானது என்று இந்த ஏலத்தில் இருந்து வெளியேறியது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் மற்றும் பார்தி ஏர்டெல் லிமிடெட் நிறுவனம் கடந்த திங்கட்கிழமையன்று, அனில் அம்பானியின் ஆர்காம் சொத்தை வாங்குவதற்காக விண்ணப்பித்துள்ளன.
கால அவகாசம் இன்றே கடைசி நாள்
கால அவகாசம் நீடிக்கப்பட்ட பின்பு 10 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இன்று கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் அதன் குழும நிறுவனமான பாரதி இன்ஃப்ராடெல்லுடன் சமர்பித்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விண்ணபிக்க தவறியதாகவும், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று ஜியோ கோரிய நிலையில், 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
கடன் வழங்குநர்கள்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சீனா டெவலப்மென்ட் வங்கி, தொழில்துறை மற்றும் கமர்ஷியல் பேங்க் ஆப் சீனா உள்ளிட்ட 40 கடன் வழங்குநர்களுக்கு கடன் வழங்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்பெக்ட்ரம், டவர் மற்றும் ஃபைபர், இது தவிர ரியல் எஸ்டேட் சம்பந்தமான வீடுகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். இது தவிர ரிலையன்ஸ் டெலிகாம் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனங்கள் சொத்துகளும் இதில் அடங்கும்.
ஒப்பந்தம் நின்று போனது
கடந்த ஆண்டே அனில் அம்பானியின் சகோதரரான முகேஷ் அம்பானி, கடந்த ஆண்டே இது குறித்தான ஒப்பந்தத்திற்கு பேசப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் இந்த ஒப்பந்தம் நின்று போனதாகவும் கூறப்படுகிறது. இதில் 43,000 டெலிகாம் டவர்களும், 1.78 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு உள்ள இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் கடைசி நேரத்தில் இந்த ஒப்பந்தம் நின்று போனதாக கூறப்படுகிறது. தற்போது முகேஷ் அம்பானி மீண்டும் களத்தில் குதித்துள்ள நிலையில் இந்த முறையாவது, தம்பியின் சொத்தை ஏலத்தில் எடுக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள முடியாது
இந்த கடந்த செப்டம்பர் காலாண்டில் நஷ்டம் கண்ட நிலையில், அனில் அம்பானி, சாயா விரானி, ரெய்னா கரானி, மஞ்சரி கக்கர், சுரேஷ் ரங்காசார் என ஐந்து பேரும் ராஜினாமா செய்தார்கள். இவர்களோடு சேர்ந்து ஆர்காம் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியாகவும், இயக்குநர் குழுவிலும் இருந்த மணிகண்டனும் ராஜினாமா செய்ய கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் அதை ஏற்க மறுத்துள்ள ஆர்காம் கடன் வழங்குனர்கள், திவால் நிலை முடிவடையும் வரை அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications