டெல்லி: அதோ வருது, இதோ வரும் என்று ஒரு வழியாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோமார்ட் ஒரு வழியாக செயல்பாட்டிற்கு வந்தாகி விட்டது.
பொதுவாக எந்த தொழிலும் தனி காட்டு ராஜவாக வலம் வரும் முகேஷ் அம்பானி, இந்த ஆன்லைன் சில்லறை வர்த்தகத்திலும் அப்படித் தான் இருப்பார். இதனால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இது கடும் போட்டியாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வந்தது.
பல வருடங்களாக தொலைத் தொடர்பு துறையில் இருந்து வந்த ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கூட ஜியோவினால் பெரும் ஆட்டம் கண்டுள்ளன. இந்த நிலையில் ஜியோமார்ட்டிலும் எப்படி தனது அதிரடியான ஆட்டத்தினை காண்பிக்க போகிறார் அம்பானி என்று தெரியவில்லை. எனினும் ஒரு பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது என்று தான் கூறவேண்டும்.
200 நகரங்களில் ஜியோமார்ட்
கடந்த சில தினங்களுக்கு முன்பு செயல்பாட்டிற்கு வந்த ஜியோமார்ட் நிறுவனம், சில நகரங்களில் மட்டும் அப்போது தனது சேவையினை கொடுத்து வந்தது. இந்த நிலையில் தற்போது ஜியோமார்ட் 200 நகரங்களில் தனது சேவையினை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 200 நகரங்கள் சரி, அது என்னென்ன நகரம், உங்கள் பகுதியும் உண்டா? வாருங்கள் பார்க்கலாம்.
எங்கெங்கு சேவை?
குறிப்பாக தற்போது அனைத்து முன்னணி நகரங்களிலும் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் கொல்கத்தா மற்றும் மைசூரு, பட்டுண்டா, டேராடூன் போன்ற சிறு நகரங்களில் கூட தனது சேவையினை கூட ஜியோமார்ட். கொடுக்க ஆரம்பித்துள்ளதாக ரிலையன்ஸ் சில்லறை நிறுவனத்தின் மளிகை வணிகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தாமோதர் மால் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
விற்பனை சரிவு
ஜியோமார்ட் நிறுவனம் கடந்த மாதம் மும்பையை சுற்றியுள்ள மூன்று சுற்றுபுறங்களில் பயனர்களுக்கு சேவை செய்யும் ஒரு திட்டத்தினை தொடங்கியது. இது தற்போது நிலவி வரும் லாக்டவுன் காலத்தில் சில்லறை விற்பனையும் கூட சரிவடைந்துள்ளதாக டி மார்ட் தெரிவித்துள்ள நிலையில் ஜியோமார்ட் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் அதன் வருவாய் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 45% குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜியோமார்ட்டுக்கு இது சாதகம் தான்
ஏனெனில் கிட்டதட்ட 50% கடைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சில்லறை விற்பனை கடைகள் குறிப்பிட்ட கால நேரங்களில் மட்டும் விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது இந்த ஆன்லைன் விற்பனை, விற்பனையை ஈடு செய்ய உதவும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே சில்லறை விற்பனையில் கால் பதித்துள்ள நிலையில், ஆன்லைன் விற்பனைக்கு இது உதவிகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆக இதனை ஜியோமார்ட்டுக்கு இதுவும் சாதகமாக விஷயமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
என்னென்ன பொருட்கள்?
ஜியோமார்ட் வலைதளத்தில் மூலம் பயனர்கள், பழங்கள், காய்கறிகள், பழங்கள், காய்கறிகள், பால் மற்றும் வேக வைத்த பொருட்கள், ஸ்டேபிள்ஸ், ஸ்னாக்ஸ், உணவு பானங்கள், பர்சனர் கேர், வீட்டு பராமரிப்பு பொருட்கள், பேபி கேர் என பலவும் பல சலுகைகளுடன் கிடைக்கிறது. தற்போதைக்கு ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களாக இருந்தாலும், பேஷன், வாழ்க்கை, நுகர்வோர், மின்னணுவியல் மற்றும் சில்லறை விற்பனையில், பல சலுகைகளையும் மற்ற இ காமர்ஸ் தளங்கள் கொடுப்பதைப் போல ஜியோமார்ட்டும் கொடுக்க முடியும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications