சென்னையின் முக்கிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கும் அடையார் அனந்த பவன் நிறுவனத்தில் சுமார் 180 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்த போதி ட்ரீ நிறுவனம் இந்தியாவில் மற்றொரு பெரிய முதலீட்டைச் செய்துள்ளது எத்தனை பேருக்கு தெரியும்.
போதி ட்ரீ நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமான ஜியோஸ்டார்-ன் முக்கிய முதலீடாக உள்ளது.

போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் மிகப்பெரிய மீடியா தொழிலதிபரான ரூபெர்ட் முர்டாக் -ன் மகனான ஜேம்ஸ் முர்டாக் மற்றும் உதய் ஷங்கர் ஆகியோர் இணைந்து துவங்கிய நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் ரூபெர்ட் முர்டாக்-ன் லுபா சிஸ்டம்ஸ் முக்கிய முதலீட்டாளராக உள்ளது.
இந்தியாவில் செயல்பட்டு வந்த வாய்காம் 18 நிறுவனத்தை ஒரு ஸ்ட்ரீமிங் தளமாக மாற்றும் முயற்சியில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்துடன் முதல் முறையாகப் போதி ட்ரீ இணைந்தது.
இந்த கூட்டு முயற்சியில் ஏப்ரல் 2023ல் போதி ட்ரீ 4300 கோடி முதலீடு செய்த வாய்காம்18 நிறுவனத்தில் சுமார் 13.08 சதவீத பங்குகளை கைப்பற்றியது. இதோடு முகேஷ் அம்பானி 10,839 கோடி முதலீடு செய்து வயாகாம்18 நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளை வாங்கியது.
இதன் பின்பு ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் இருக்கும் அனைத்து மீடியா தளத்தையும், டிஸ்னி இணைப்பு, பாராமவுண்ட் குளோபல் பங்குகள் ஆகியவற்றையும் சேர்ந்து தற்போது ஜியோ ஸ்டாராகவும், 70000 கோடி சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்துள்ளது.
இந்த மாபெரும் இணைப்பு, ஒருங்கிணைப்புக்குப் பின்பு, ஜியோ ஸ்டார் நிறுவனத்தில் போதி ட்ரீ சுமார் 7.5 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இதோடு போதி ட்ரீ நிறுவனத்தின் நிறுவனரான உதய் ஷங்கர் ஜியோ ஸ்டாரின் துணை தலைவராகவும், தலைவர் பொறுப்பில் இருக்கும் நீதா அம்பானி-க்கு ஆலோசகராகவும் உள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு பல்வேறு மீடியா சொத்துக்களை சேர்த்ததிற்கு முக்கிய காரணியாக இருந்தவர் உதய் ஷங்கர். இதில் முக்கியமாக வயாகாம்18 சொத்துக்கள்.
அடையார் ஆனந்த பவன்
இதே போதி ட்ரீ நிறுவனம் தான் தற்போது 380 மில்லியன் டாலர் மதிப்புடைய அடையார் ஆனந்த பவன் நிறுவனத்தில் 180 மில்லியன் டாலர் முதலீடு செய்து சுமார் 48 - 49 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.
அடையார் ஆனந்த பவன் நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளைக் கைப்பற்றியதன் வாயிலாகப் போதி ட்ரீயின் இணை நிறுவனரான உதய் ஷங்கர் தற்போது A2B-யின் சேர்மன் ஆக பொறுப்பேற்றாக உள்ளார்.
போதி ட்ரீ நிறுவனத்தின் முதலீட்டின் மூலம் A2B இதுவரையில் செல்லாத வர்த்தக சந்தைக்கு நுழைய முடியும். இதேபோல் ஹால்திராம்ஸ் போல ஐபிஓ வெளியிடவும் இந்த முதலீடு கட்டாயம் பயன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் போதி ட்ரீ போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் ALLEN நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications
