எலான் மஸ்க்-ஐ காப்பியடிக்கும் அம்பானி.. புதிய பிஸ்னஸ்-ஐ துவங்க திட்டம்..!!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, 2020ல் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்டி முதலீட்டாளர்களைக் குஷிப்படுத்தினார்.

இந்நிலையில் தற்போது முகேஷ் அம்பானி யாரும் எதிர்பார்க்காத வகையில் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் கிளீன் மற்றும் கிரீன் எனர்ஜி பிரிவில் இறங்க முடிவு செய்துள்ளார்.

இதன் மூலம் ரிலையன்ஸ் குழுமத்தின் நியூ எனர்ஜி மற்றும் நியூ மெட்டீரியல் துறையில் தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியும். இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் எதிர்காலமாகக் கருதப்படும் எலக்ட்ரிக் கார்களின் உற்பத்திக்கு முக்கியப் பங்கு வகிக்க உள்ளது ரிலையன்ஸ்.

டெஸ்லா எலான் மஸ்க்

டெஸ்லா எலான் மஸ்க்

உலகின் முன்னணி எலக்டிரிக் கார் நிறுவனமான டெஸ்லா அதிகளவிலான வருமானத்தையும், லாபத்தையும் எலக்ட்ரிக் கார் விற்பனை செய்வது மூலம் பெறுகிறது. ஆனால் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் தொடர்ந்து அதிகளவிலான முதலீட்டை மின்சார உற்பத்தி மற்றும் சேமிப்பு வர்த்தகத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருகிறார். குறிப்பாகப் பேட்டரி மற்றும் சோலார் பேனல் தயாரிப்பிலும் மேம்படுத்துதலிலும் அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருகிறார்.

எலான் மஸ்க் அதிரடி வளர்ச்சி

எலான் மஸ்க் அதிரடி வளர்ச்சி

சில வருடங்களுக்கு முன்பு எலான் மஸ்க் யார் என்று பலருக்கும் தெரியாத நிலையில் இன்று உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார், இந்த அதிரடி உயர்வுக்கு முக்கியக் காரணம் எலான் மஸ்க்-ன் futuristic ஐடியாக்கள் தான். இந்நிலையில் எலான் மஸ்க்-ஐ போலவே முகேஷ் அம்பானியும் மின்சார உற்பத்தி மற்றும் சேமிப்புத் துறையில் இறங்கத் திட்டமிட்டு உள்ளார்.

ஸ்டேஷனரி எனர்ஜி சேமிப்பு

ஸ்டேஷனரி எனர்ஜி சேமிப்பு

உலகளவில் ஸ்டேஷனரி எனர்ஜி சேமிப்பு அளவீடுகள் எப்போதும் இல்லாமல் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் இதன் வளர்ச்சி புதிய உச்சத்தை அடைந்து வருகிறது, 2020ல் மட்டும் ஸ்டேஷனரி எனர்ஜி சேமிப்பு அளவு 72 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தப் பிரம்மாண்ட வளர்ச்சித் துறையை ஆரம்பத்திலேயே கைப்பற்ற வேண்டும் என்று தான் எலான் மஸ்க்-ஐ போலவே முகேஷ் அம்பானியும் இறங்கத் திட்டமிட்டு உள்ளார்.

50 பில்லியன் டாலர் இலக்கு

50 பில்லியன் டாலர் இலக்கு

இந்நிலையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் renewables, பேட்டரி, புதிய எரிபொருள் ஆகியவற்றைத் தயாரிக்கவும், உற்பத்தி செய்யவும் அடுத்த 10 வருடத்தில் 13 முதல் 15 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்யும் எனவும், இதன் மூலம் 50 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தைப் பெற முடியும் எனவும் சர்வதேச முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.

ரிலையன்ஸ் O2C

ரிலையன்ஸ் O2C

இதற்கிடையில் தற்போது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் எண்ணெய் வர்த்தகத்தைத் தனியார் பிரித்து ரிலையன்ஸ் O2C என்ற புதிய உருவாக்கியுள்ளார். இந்நிறுவனத்தின் பங்குகளை உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் கொண்டு இருக்கும் சவுதி அராம்கோ நிறுவனத்திடம் விற்பனை செய்யப் பேச்சுவார்த்தை நடந்துவதில் மிகவும் பிசியாக உள்ளது ரிலையன்ஸ்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+