முகேஷ் அம்பானியின் சொத்து பிரிக்கும் மெகா திட்டம்.. 3 சூப்பர் ஸ்டார்களுக்கு என்ன தேவை..!

ஆசிய பணக்காரர்களில் மிகப்பெரிய பணக்காரராக விளங்கும் முகேஷ் அம்பானி தனது சொத்துக்களை பிரித்துக் கொடுப்பது குறித்து, சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தின் தலைமை மாற்றம் பற்றி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும் மூத்த தலைமுறையினரிடமிருந்த அதிகாரத்தை, இளைய தலைமுறைக்கு கொடுக்க விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

இது குறித்து டிசம்பர் 28 அன்று திரும்பாய் அம்பானியின் பிறந்த நாள் அன்றும் பேசியிருந்தார், இன்று சர்வதேச அளவில் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வரும் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் வாரிசுகளாக மூன்று மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களான முகேஷ் அம்பானியின் பிள்ளைகள் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் உள்ளனர்.

மூன்று ஸ்டார்கள்

மூன்று ஸ்டார்கள்

இந்த நிலையில் இந்த மெகா திட்டத்தினை எப்படி அமல்படுத்தப் போகிறார். 217 பில்லியன் டாலர் சாம்ராஜ்ஜியத்தினை எப்படி மாற்றப்போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாகவே இருந்து வருகின்றது. எனினும் இந்த மெகா சொத்து பிரிப்பு திட்டத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்களும் கார்ப்பரேட் வாரிசுகளாக இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கும்.

ஏன் இந்த திட்டம்?

ஏன் இந்த திட்டம்?

64 வயதான இந்த மிகப்பெரிய தொழிலதிபர் அவரின் தந்தை திருபாய் அம்பானி இறந்த பிறகு, எந்தவித உயில் போன்ற ஆவணங்களும் இல்லாமல், மிகப்பெரிய சொத்து பற்றிய சர்ச்சை அவரின் இளைய சகோதரரான அனில் அம்பானியுடன் உருவாகியது. இதன் காரணமாக இதுபோன்ற பிரச்சனைகள் தனது வாரிசுகள் மத்தியில் வரக்கூடாது என்பதற்காக, இதுபோன்ற மெகாதிட்டத்தினை பற்றி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு வணிகங்கள்

பல்வேறு வணிகங்கள்

தற்போதுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல்ஸ், சில்லறை வணிகம், டெலிகாம் வணிகம் என அனைத்தினையும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. வேறு எந்த நிறுவனமும் திட்டமிடாத வகையில் தற்போது ரிலையன்ஸ் புதுபிக்க தக்க ஆற்றல் எனர்ஜியை பற்றியும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றது. இதில் ரிலையன்ஸ் வெற்றிகரமாக காலூன்றி விட்டால், இது மிகப்பெரிய வெற்றிகரமான வணிகமாகவும் ரிலையன்ஸுக்கு மாறிவிடும்.

 முதலீடுகளை திரட்டலாம்

முதலீடுகளை திரட்டலாம்

எனினும் இந்த புதிய மாபெரும் வணிகத்திற்கு மூலதனம் என்பது மிகப்பெரிய அளவில் தேவைப்படும். ஏற்கனவே அதன் சில்லறை வணிகம், தொலைத் தொடர்பு வணிகம் உள்ளிட்டவற்றினை மேம்படுத்த போதிய நிதியினை திரட்டிய ரிலையன்ஸ், அடுத்த தலைமுறை வணிகத்தினை மேம்படுத்தவும் முதலீடுகளை திரட்டலாம்.

வளர்ச்சிக்கு உந்துதல்

வளர்ச்சிக்கு உந்துதல்

மொபைல் இணையம், சில்லறை வர்த்தகம், புதிய எனர்ஜி உள்ளிட்ட மூன்றுமே வலுவான வணிகங்களாக இருந்து வருகின்றன. மெக்கின்சி & கோ அறிக்கையின் படி, டாப் 10 நிறுவனங்கள், 80% நேர்மறையான பொருளாதார லாபத்தினை கைபற்றிக் கொள்கின்றன என கூறுகின்றது.

கடந்த தசாப்தத்தில் இருந்த வட்டி குறைப்பானது , நிறுவனங்கள் வளர்ச்சி காணுவதில் முக்கிய பங்கு வகித்தன. இது நிறுவனங்கள் கடன் பெறுவதிலும் சாதகமாக அமைந்தன. இதுவும் நிறுவனங்கள் வளர்ச்சி காண முக்கிய பங்கு வகித்தன.

பிரச்சனைகள்

பிரச்சனைகள்

எனினும் எந்தவொரு பெரிய நிறுவனங்களும் பிரச்சனை இல்லாமல் இல்லை. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான உறவு குறித்த அச்சம், சீனாவின் மாடல் என பல சவால்களும் காத்துக் கொண்டுள்ளன. இதற்கிடையில் முகேஷ் அம்பாயின் மூன்று ஸ்டார்களான ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானிகளுக்கு இடையே எந்தவித பிரச்சனையும் இல்லாமலும் இருக்க வேண்டும். ஏற்கனவே சில உறுதிப்படுத்தல்கள் என்பது இருந்தாலும், இது இறுதி கட்டத்தினை எட்டும்போது தான் முழுமையாக தெரியவரும். மொத்ததில் மூன்று ஸ்டார்களுடன் மனைவி உள்ளிட்டோருக்கு சொத்துகளை பிரிப்பதில் ஒரு வெற்றிகரமான மெகா பிளான் என்பது மிக அவசியமாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+