ஆரம்பமே அசத்தல்.. முகேஷ் அம்பானி முடிவால் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி, தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீல் கீழ் இருக்கும் ரீடைல், டெலிகாம், கிளீன் எனர்ஜி பிரிவில் அடுத்தடுத்து மிகப்பெரிய திட்டத்தைக் கையில் எடுத்திருக்கும் நிலையில் வர்த்தக வளர்ச்சிக்காகவும், விரிவாக்கத்திற்காகவும் முகேஷ் அம்பானி புதிய முதலீட்டை திரட்டும் பணியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

புத்தாண்டில் துவக்கம் முதலே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வர்த்தகச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கியுள்ளது.

 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் ஆன்லைன் பார்மா துறையில் B2B2C சேவையை அறிமுகம் செய்யவும், ஜியோ நிறுவனத்தில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யவும், கிளீன் எனர்ஜி பிரிவில் பல முதலீட்டு மற்றும் கட்டுமான திட்டங்களையும் செயல்படுத்த உள்ளது.

 3 பில்லியன் டாலர்

3 பில்லியன் டாலர்

இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைக்கும் விதத்தில் வெளிநாட்டுச் சந்தையில் சுமார் 3 பில்லியன் டாலர் அதாவது 22,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்டும் வகையில் பத்திர விற்பனையைச் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது, மேலும் இந்தக் கடன் பத்திர விற்பனை அடுத்த 2 வாரத்தில் துவங்க உள்ளதாகவும் தெரிகிறது.

 மறு முதலீடு

மறு முதலீடு

இந்தப் பத்திர விற்பனை மூலம் ஏற்கனவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்கியுள்ள கடன் மற்றும் வெளிநாட்டில் வெளியிட்டுள்ள பத்திரங்களுக்கு மறு முதலீடு செய்யவும் திட்டமிட்டு உள்ளது. அடுத்த 3-4 மாதத்தில் ரிலையன்ஸ் ஏற்கனவே வெளியிட்ட 8-10 வருட வெளிநாட்டு முதலீட்டுப் பத்திரங்கள் முதிர்வு அடைய உள்ளது, இதற்கான நிதியை வழங்கிட இந்தப் புதிய பத்திர விற்பனையைச் செய்ய உள்ளது.

 debt neutral நிலை

debt neutral நிலை

பொதுவாகவே இந்தக் கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் கடன் சுமையைக் குறைக்க முடிகிறது, ஏற்கனவே கடனில்லா நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் தொடர்ந்து debt neutral நிலையைத் தக்க வைக்க இப்புதிய கடன் பத்திரத்தை விற்பனை செய்ய உள்ளது.

 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் 19.17 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது. மேலும் கிளீன் எனர்ஜி துறையில் புதிதாக ஈட்டப்படும் முதலீடு மற்றும் துவங்கப்படும் வர்த்தகம் மூலம் ரிலையன்ஸ் பங்குகள் அடுத்த ஒரு வருடத்தில் 3000 ரூபாய் அளவீட்டைத் தொடும் எனக் கணிக்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+