இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானி தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் தொடர்ந்து பல நிறுவனங்களைக் கைப்பற்றி வருகிறார்.
அப்படிச் சில மாதங்களுக்கு முன்பு தனது ரீடைல் வர்த்தகத்தை மேம்படுத்த பியூச்சர் குரூப் நிறுவனத்தைக் கைப்பற்ற ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், இந்நிறுவனத்தில் ஏற்கனவே முதலீடு செய்திருந்த அமேசான் நிறுவனம், பியூச்சர் குரூப் - ரிலையன்ஸ் ரீடைல் நிறுவன ஒப்பந்தத்திற்குத் தடை உத்தரவைப் பெற்றது.
இந்தப் பிரச்சனைக்குப் பின்பு நிறுவனத்தைக் கைப்பற்றுவதில் தயக்கம் காட்டி வந்த முகேஷ் அம்பானி தற்போது 8888888888 எண்ணுக்கு போன் செய்துள்ளார்.
ஜஸ்ட்டயல் நிறுவனம்
இந்தியாவின் மிகப்பெரிய லோக்கல் சர்ச் மற்றும் விற்பனையாளர்களின் டேட்டா பேஸ் தேடல் நிறுவனமான ஜஸ்ட்டயல், சில வாரங்களுக்குத் தன் நிறுவனத்தை விற்பனை செய்ய உள்ளதாகவும் அதற்காக டாடா, ரிலையன்ஸ், சாப்ட்பேங்க் மற்றும் இன்னும் பல நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஜஸ்ட்டயல் நிறுவனத்தைக் கைப்பற்ற ஏற்கனவே டாடா முயற்சி செய்த நிலையில், தற்போது மீண்டும் கைப்பற்றுவதற்குப் போட்டிப்போடும் என அதிகளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போட்டியில் முதல் இடத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் குழுமத்தின் ரீடைல் பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய ஜஸ்ட்டயல் நிறுவனத்தை 800 முதல் 900 மில்லியன் டாலர் வரையிலான தொகைக்குக் கைப்பற்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் உள்ளது.
ஜஸ்ட்டயல் நிர்வாகக் கூட்டம்
இதற்கிடையில் ஜஸ்ட்டயல் நிறுவனம் ஜூலை 16ஆம் தேதி நிர்வாகக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இப்புதிய முதலீட்டு திரட்டல் குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்க இந்தக் கூட்டம் கூட்டப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
15 கோடி வாடிக்கையாளர்கள்
ரீலையன்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் நிறுவனமாக இருக்கும் வேளையில், லோக்கல் சர்ச் இன்ஜின் பிரிவில் ஜிஸ்ட்டயல் டாப் நிறுவனமாக உள்ளது. சுமார் 15 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள ஜஸ்ட்டயல் நிறுவனத்தைக் கைப்பற்றுவது ரிலையன்ஸ்-க்கு மிகப்பெரிய ஜாக்பாட்.
60 சதவீத பங்குகள்
மொபைல் ஆப், இணையதளம், 8888888888 எண் கொண்ட ஹாட்லைன் கால் உதவிகளை அளிக்கும் ஜஸ்ட்டயல் நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளைக் கைப்பற்றத் திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications