இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் கிளீன் எனர்ஜி பிரிவில் விரிவாக்கம் செய்து வருகிறது. இத்துறையில் புதிதாக நிறுவனத்தை உருவாக்குவதை விட்டு ஏற்கனவே இத்துறையில் இருக்கும் நிறுவனத்தைக் கைப்பற்றுவதன் மூலம் வேகமாக வளர்ச்சி அடைய முடியும் என ரிலையன்ஸ் முடிவு செய்தது.
இதேபோலத் தான் டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் ரீடைல் வர்த்தகத்திலும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செய்தது. சமீபத்தில் நார்வே நாட்டின் REC சோலார் ஹோல்டிங் நிறுவனத்தை மொத்தமாகச் சீன நிறுவன கட்டுப்பாட்டில் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்தது.
REC சோலார் ஹோல்டிங்
REC சோலார் ஹோல்டிங் நிறுவனத்தைக் கைப்பற்ற ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், இதற்கான தொகையைப் பசுமை கடன் பிரிவில் சுமார் 736 மில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பெற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முடிவு செய்துள்ளது. முதல் முறையாக ரிலையன்ஸ் ஒரு நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்காகக் கடன் பெற முடிவு செய்துள்ளது.
வங்கிகள்
இந்த 736 மில்லியன் டாலர் மதிப்பிலான பசுமை கடனை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வங்கிகள் DBS வங்கி, கிரெடிட் ஆக்ரிகோல், HSBC, MUFG எனப் பல வங்கிகள் இணைந்து அளிக்க உள்ளதாகத் தகவல் வெலியாகியுள்ளது.
பசுமை கடன்
இந்தப் பசுமை கடனுக்கு LIBOR வட்டி விகிதத்தை விடவும் 1.20 முதல் 1.25 சதவீதம் வித்தியாசம் இருக்கும், மேலும் இந்த 736 மில்லியன் டாலர் மதிப்பிலான பசுமை கடனை REC சோலார் ஹோல்டிங் நிறுவனத்தின் பெயரில் வழங்கப்பட்டு, இதற்கான உத்தரவாதத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் அளிக்க உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கிளீன் எனர்ஜி பிரிவில் மட்டும் சுமார் 75,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பிரிவில் ஹைட்ரஜெட் உற்பத்தி, ஹைட்ரஜெட் செல் உற்பத்தி, சோலார் பேனல், பேட்டரி உற்பத்தி என 4 பிரிவில் தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
சீனா நேஷ்னல் ப்ளூஸ்டார்
இந்நிலையில் சோலார் பிரிவு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யக் கைபற்றிய நிறுவனம் தான் REC சோலார் ஹோல்டிங் நிறுவனம். இந்த நிறுவனம் சீன அரசு நிறுவனமான சீனா நேஷ்னல் ப்ளூஸ்டார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது மொத்தமாக ரிலையன்ஸ் கைப்பற்ற உள்ளது.
முகேஷ் அம்பானி
இதுதவிரச் சமீபத்தில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சோலார் பேனல் பிட்டிங் மற்றும் இதர பல சோலார் பேனல் சேவைகளை உலகம் முழுவதும் அளிக்கும் ஸ்ரெட்லிங் அண்ட் வில்சன் சோலார் நிறுவனத்தில் 40 சதவீத பங்குகளைக் கைப்பற்றினார் முகேஷ் அம்பானி.


Click it and Unblock the Notifications